Posts

கிரிக்கெட் உலகக் கிண்ணம் 2019 | இங்கிலாந்து அணி விபரம்

Image
கிரிக்கெட் உலகக் கிண்ணம் 2019  இங்கிலாந்து அணி விபரம்  15 பேர் கொண்ட உலகக் கிண்ணத்திற்கான இறுதி செய்யப்பட்ட அணி  இயன் மோர்கன் (தலைவர்)  மொயின் அலி  ஜொன்னி பைர்ஸ்டோவ்  ஜோஸ் பட்லர் (விக்கெட் காப்பாளர்)  டொம் கரன்  ஜோ டென்லி  அலெக்ஸ் ஹேல்ஸ்  லியாம் பிளங்கெட்  அடில் ரஷீத்  ஜோ ரூட்  ஜேசன் றோய்  பென் ஸ்டோக்ஸ்  டேவிட் வில்லீ  கிறிஸ் வோக்ஸ்  மார்க் வூட்  கிரிக்கெட் உலகக் கிண்ணம் 2019 | இங்கிலாந்து அணி விபரம்  https://newsigaram.blogspot.com/2019/05/icc-cricket-world-cup-2019-team-squad-england.html  #CWC19 #England #ICC #ICCCricketWorldCup #Cricket #Team #WorldCupTeam #CWC2019 #ICCWorldCup #ODI #TeamSquad #CricketScores #CricketNews 

சிகரம் வலைப்பூங்கா - 04

Image
உமாஜியின் ‘காக்கா கொத்திய காயம்’ அ. முத்துலிங்கத்தின் “உண்மை கலந்த நாட்குறிப்புகள்” புத்தகத்தை வாசிக்கும் போது அது நாவல் என்று கூறப்பட்டு இருந்தாலும் சுயபுனைவு என்றே புரிந்துகொள்ள முடிகிறது. தடுக்கிச் சரியும் ஒவ்வொரு அத்தியாயமும் அவரது பால்யத்தை எள்ளலுடன் புன்னகைக்கும் வகையில் சொல்லிச் சென்றிருக்கும். இந்தப் புன்னகைக்க வைக்கும் தன்மைதான் அப்புத்தகத்தின் வெற்றியோ என்று கூட தோன்ற வைக்கும். பால்யத்தை மீட்டிப் பார்க்கும் போது இனிமையான சம்பவங்கள் சட்டென்று முதலில் நினைவுக்கு வரும்; பின்னர் மெல்ல மெல்ல அந்த நினைவுகளைக் கடந்து கசப்பான நினைவுகள் சுற்றிப்பிடித்து விழுங்க ஆரம்பிக்கும். இதனைச் சமநிலை குலையாமல் எழுதும் போதே சுயபுனைவுக்கான வடிவம் கூடிவருகிறது. இவற்றை சுயசரிதையாக வெறுமே கருத முடிவதில்லை. ஊகங்களாகக் கடந்து செல்ல வேண்டியவற்றைக் கூட சம்பவங்களாக எழுதி ஆசிரியரால் இட்டு நிரப்படப்படுகிறது. புனைவுக்கான முடிச்சுகளுடன் கச்சிதமாக முடிக்கப்படுகின்றன. முழுமையாக வாசிக்க...   திருக்குறள் கதைகள் - அறத்துப்பால் - 255. சரஸ்வதியின் சந்தேகம் "மனுஷனை மனுஷன் சாப்பிடறாண்டா தம்பிப் ப...

கூகுள் குரோம் தேடல் முடிவுகளை எப்போதும் புதிய திரையில் (Tab) திறக்கச் செய்வது எப்படி?

Image
இணைய உலகில் தேடல் என்றாலே அது கூகுள் தான். அது போலவே இணைய உலாவி என்றால் அது கூகுள் குரோம் தான்.  ஒரு தடவை கூகுள் குரோமில் உள்நுழைந்து வைத்தால் கூகுளின் அத்தனை சேவைகளையும் ஒரே சொடுக்கில் அணுக முடியும்.  நீங்கள் கூகுள் குரோம் பாவனையாளரா?  கூகுள் குரோம் வாயிலாக கூகுள் தேடு பொறியில் தேடல்  முடிவுகளை புதிய திரையில் (Tab) திறக்க முடியவில்லையா?  நீங்கள் தேடல் முடிவுகளை எடுத்த அதே திரையிலேயே (Tab) இணைய இணைப்புகள் திறக்கின்றனவா?  ஆங்கிலத்தில் சொல்வதானால் ' how to open google search results in a new tab?'  இதோ உங்களுக்கான தீர்வு!  கீழ்வரும் இணைப்பை உங்கள் முகவரிப் பட்டையில் திறவுங்கள்:  https://www.google.com/preferences   இப்போது உங்களுக்கு கீழ்வரும் அமைப்பிலான திரை கிடைக்கும்.  இந்தத் திரையில் 'Where Results Open' என்பதை ( முடிவுகள் திறக்கப்படும் இடம்) என்னும் தெரிவுக்கு செல்லுங்கள்.  அதில் ' Open each selected result in a new browser window' ( தேர்ந்தெடுத்த ஒவ்வொரு முடிவ...

நோக்கியாவின் புதிய அறிமுகம் | நோக்கியா 4.2

Image
நோக்கியா திறன்பேசிகள் சந்தையில் சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கின்றன. கடந்த மூன்று வருடங்களாக பல்வேறு வகையான திறன்பேசிகளை நோக்கியா அறிமுகப்படுத்தியிருக்கிறது.  அந்த வரிசையில் 2019ஆம் ஆண்டு மே மாதம் 14ஆம் திகதி நோக்கியா 4.2 சந்தைக்கு வருகிறது. அதன் சிறப்பம்சங்கள் சிலவற்றை சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.  Image Credit : Nokia / nokiamob.net / Google  நோக்கியா 4.2 / NOKIA 4.2   மென்பொருள் / இயங்குதளம் : ஆண்ட்ராய்டு 9.0  RAM : 3 ஜி.பி  உள்ளக நினைவகம் : 32 ஜி.பி  தொடு திரை : 5.71 அங்குலம்  வடிவ விகிதம் : 19:9  திரை தெளிவுத் திறன்: 720x1520  முக பாதுகாப்பு குறியீடு: ஆம்  Processor: Snapdragon 439  பிரதான கெமரா : 13 + 2 MP  முன் கெமரா : 8 MP  புளுடூத் : 4.2 LE  USB : 2.0  கைவிரல் அடையாள பாதுகாப்பு : உண்டு  NFC : உண்டு  கூகுள் அசிஸ்டென்ட் பொத்தான் (Button) : உண்டு  விலை : 189 அமெரிக்க டொலர்  இலங்கை விலை : 332...

பயணங்கள் பலவிதம் - 09 (பகுதி - 01)

Image
'யாழ்தேவியில் நாங்கள் காதல் செய்தால் யாழ் மீட்டுமே ரயில் தண்ட வாளம்' என்றொரு இலங்கைப் பாடல் உண்டு. நான் யாழ்ப்பாணத்துக்குச் சென்றபோது அந்தப் பாடல்தான் நினைவுக்கு வந்தது. வாங்க என்னோடு பயணிக்கலாம்.  2018/06/11 கொட்டகலை - கொழும்பு   மீண்டும் அதே கொழும்பு நோக்கிய பயணம். இந்த முறை நான் வேலை செய்து விலகிய நிறுவனத்தில் எனது சம்பளம் உள்ளிட்ட விடயங்களைப் பெற்றுக் கொள்வதற்காகப் பயணமாகியிருந்தேன்.  அதிகாலை மூன்று மணியளவில் எழுந்து கொழும்பு செல்வதற்காகத் தயாரானேன். அதிகாலை நான்கு மணியளவில் எனக்குத் தெரிந்த முச்சக்கர வண்டியில் பயணம் ஆரம்பமானது. சுதா என்னும் முச்சக்கர வண்டி நண்பர் கொழும்பில் இருந்து சிலரை ஏற்றி வருவதற்காக சென்றார். ஆகவே அவர் கொட்டகலையில் இருந்து வெறுமனே தான் சென்று வர வேண்டும். அதனால் நான் கொழும்பு செல்ல வேண்டியிருப்பதை அறிந்த அவர் தன்னோடு வருமாறு அழைத்தார். நானும் அவருடைய அழைப்பை ஏற்று அவருடன் பயணமானேன்.  அதிகாலை நேரம் குளிரும் தூக்கமும் துன்புறுத்தினாலும் அவருடன் உரையாடியபடி பயணித்தேன். காலை எட்டு மணியளவில் ஓரிடத்தில் நிறுத்தி காலை உணவை ...