நண்பர் கதிரவனுக்கு ஓர் கடிதம் - 01

நண்பர் கதிரவனுக்கு, நலம் நலமறிய ஆவல். மிக நீண்ட காலத்திற்குப் பின் நண்பரொருவருக்கு கடிதம் எழுதுவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். நாம் 2018 முதல் வாட்ஸப்பில் உரையாடி வருவதாக பதிவுகள் உள்ளன. பேஸ்புக்கில் எப்போது நட்பானோம் என்று தெரியவில்லை. நாம் பெரும்பாலும் உங்கள் கதைகள் பற்றியே பேசியிருக்கிறோம். உங்கள் கதை சொல்லும் ஆர்வம் புத்தக வெளியீடாக, கனவு நனவாகியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. எனது வலைத்தளத்தில் உங்கள் சில கதைகளை பிரசுரித்து உள்ளேன். நான் வாசித்தாலும் வாசிக்காவிட்டாலும் வாட்ஸப்பில் பல கதைகளை எனக்கு அனுப்பி உள்ளீர்கள். நான் சொன்ன சில கருத்துக்களை ஏற்று அதற்கேற்ற மாற்றங்களை உங்கள் அடுத்தடுத்த படைப்புகளிலும் நிகழ்த்தியுள்ளீர்கள். என் கருத்துக்களுக்கும் நீங்கள் மதிப்பளித்தமை நீங்கள் என்மீது வைத்துள்ள நம்பிக்கையின் ஒரு வெளிப்பாடே என்று நான் நம்புகிறேன். நீங்கள் பல சிறுகதைகளை எழுதியிருந்தாலும் உங்களை என்னுடன் நெருக்கமாக்கிய ஒன்றாக '2601 - வெளிநாட்டு வேலைக்காரனின் வாழ்வு அனுபவங்கள்' தொடரை பார்க்கிறேன். பேஸ்புக்கில் நான் தவறாது தொடர்ந்து வாசித்து வந்தேன். சில கதைகளை வாசித்த...