கற்பனை உலகம்

Image credit to respective owners only



என் எண்ணத்தில் 

ஓர் கற்பனை உலகம் 

அதில் குரு பெயர்ச்சியும் 

சனி உச்சமும் கிடையாது 

தேர்தல் இல்லை 

தேவைகள் இல்லை 

போலிகள் இல்லை 

பொய்களும் இல்லை 

அங்கு 

நானும் அவளும் 

ஓர் 

அழகான வாழ்க்கையும் 

இந்த வாழ்க்கை 

இப்படியே 

கற்பனையில் 

போனாலும் பரவாயில்லை

ஆனால் 

அந்த 

அழகான வாழ்க்கை பற்றிய 

கற்பனை மாத்திரம் 

போய்விடக்கூடாது 

இல்லையெனில் 

என் நிழலை 

நான் 

எங்கு தேடுவேன்?

Comments

  1. கற்பனை உலகம் எப்போதும் நிறைவினைத் தரும்.

    ReplyDelete
    Replies
    1. ஆம் ஐயா. ஆனால் அதை நனவாக்கத்தான் இந்த மனிதனுக்கு தெரியவில்லை.

      Delete
  2. எதையும் அறிந்து தெரிந்து புரிந்தால், கற்பனையும் சாத்தியமே...

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் நண்பரே. முயற்சியும் உழைப்பும் இருந்தால் எதுவும் சாத்தியமே. நன்றி நண்பரே.

      Delete

Post a Comment

உங்கள் கருத்துகள் தான் எங்களுக்கான கைதட்டல்கள். பதிவைப் பற்றிய எண்ணங்களை தயங்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் விமர்சனங்களை வரவேற்கிறோம்.

சிகரம்