பதினான்காம் ஆண்டில் கால் பதிக்கும்'சிகரம்' !

பதின்மூன்று ஆண்டுகளைக் கடந்து பதினான்காம் ஆண்டில் காலடி பதித்திருக்கிறது நமது 'சிகரம்' !. 

பாடசாலை மாணவனாக இருந்தபோது ஆரம்பித்த பெருங்கனவு, தந்தையாக ஆன பின்பும் இன்னமும் தீராக் கனவாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. 



2006.06.01 அன்று பாடசாலையில் கையெழுத்துப் பத்திரிகையாக தனது பயணத்தை ஆரம்பித்தது 'சிகரம்'. 

இன்று வலைத்தளமாகவும் இணையத்தளமாகவும் பரிணமித்திருக்கிறது. 

உலகில் தமிழர்கள் எங்கெல்லாம் வாழ்கிறார்களோ அங்கெல்லாம் முதல்தர இணையத்தளமாகவும் அச்சு ஊடகமாகவும் 'சிகரம்' உருவாக வேண்டும் என்பதே என் அவா. 

என் கனவை என்றேனும் நனவாக்கிவிட முடியும் என்ற நம்பிக்கையில் என் நெஞ்சில் சுமந்து திரிகிறேன். 

நனவாகிவிடு என் பெருங்கனவே! 

என் சராசரி ஆயுளின் இரண்டில் ஒரு பகுதியை இன்னும் ஓரிரு ஆண்டுகளில் கடக்கப் போகிறேன். ஆன போதிலும் இன்னும் கனவு கனவாகவே இருக்கிறது. கனவை நனவாக்க முடியாமலே போய்விடுமோ என்பதே என் பேரச்சமாக இருக்கிறது. எனினும் ஏதாவது ஒரு வழியில் கனவை நனவாக்கும் முயற்சியில் நான் ஈடுபட்டு வந்தவண்ணமே இருக்கிறேன். 

நனவாகிவிடு என் பெருங்கனவே!!! 

உலகில் பெரும்புரட்சிகளை நிகழ்த்தப் போகும் 2020ஆம் ஆண்டில் மீண்டும் ஓர் பிறந்த நாள் பதிவில் சந்திப்போம்! 

அதற்குள், 
நனவாகிவிடு என் பெருங்கனவே!!! 

பதினான்காம் ஆண்டில் கால் பதிக்கும்'சிகரம்' ! 
https://newsigaram.blogspot.com/2019/06/sigaram-lk-step-in-year-14.html 
#Sigaram #Sigaram_lk #Sigaram_CO #Sigaram_Anniversary #Writer #Writing #Dream #Media #Journalism #Tamil #Blogger #WebSite #Internet #Online_Media 

Comments

Post a Comment

உங்கள் கருத்துகள் தான் எங்களுக்கான கைதட்டல்கள். பதிவைப் பற்றிய எண்ணங்களை தயங்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் விமர்சனங்களை வரவேற்கிறோம்.

சிகரம்

Popular posts from this blog

உங்கள் மனம் கவர்ந்த பிக்பாஸ் போட்டியாளர் யார்? Who is your favourite Bigg Boss Contestant?

பத்தி எழுத்து என்றால் என்ன? | கட்டுரை | வல்லினம் | ஸ்ரீதர் ரங்கராஜ்

சிக்கலில் சிக்கிய பிக் பாஸ்? இரண்டாம் வாரத்துடன் இடைநிறுத்தம்?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2019-21 | இருபது-20 கிரிக்கெட் | சிகரம் ஆடுகளம்

பிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - ஜூன் மாதம் ஆரம்பம்!

ஐ.பி.எல் ஆட்ட விவரங்கள் | புள்ளிப் பட்டியல் IPL 2018 SCHEDULE & RESULTS #IPL2018 - WEEK 01

Bigg Boss Tamil Vote (Online Voting) Season 02 | Public Opinion Poll | Week 13 Voting | Google Vote

பிக் பாஸ் தமிழ் - 02 எப்படி அமையும்?

ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா - 2018 ஏப்.07 இல் ஆரம்பம்! #IPL2018

பிக்பாஸ் உத்தியோக பூர்வ அறிவிப்பு மே 26 ஆம் திகதி!