போய்வா 2016ஆம் ஆண்டே!

வணக்கம் வலைத்தள வாசகர்களே! இதோ நாம் 2016 ஆம் ஆண்டின் இறுதி நாளின் இறுதி மணித்தியாலத்தின் இறுதி நிமிடங்களைக் கடந்து கொண்டிருக்கிறோம். பிறக்கப் போகும் 2017 ஆம் ஆண்டு ஆங்கிலப் புத்தாண்டு இனிய ஆண்டாக அமைய அனைவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த ஆண்டில் நமக்கு விருப்பமான நிகழ்வுகள் பல நடைபெற்றிருக்கலாம். அதே போலவே நாம் விரும்பாதவைகளும் நடைபெற்றிருக்கலாம். நடந்தவை எதுவாக இருந்தாலும் அவற்றை மறந்துவிட்டு அவை தந்த படிப்பினைகளை மட்டும் மனதில் கொண்டு 2017 ஆம் ஆண்டை எதிர்கொள்ளத் தயாராகுவோம். கடந்த காலங்களில் நாம் விட்ட தவறுகளை திருத்திக் கொண்டு நமது இலக்கை நோக்கி முன்னேறுவோம். வரும் ஆண்டு நிச்சயம் நம் பெயர்களை சரித்திரத்தில் இடம்பெறச் செய்யும் ஆண்டாக அமையட்டும் என்று வாழ்த்தி 2016 ஆம் ஆண்டில் உங்களிடம் இருந்து விடைபெறுகின்றேன். நன்றி.