கந்தசாமியும் சுந்தரமும் - 01
"கந்தசாமி அண்ணே ஏன் அமைதியா உக்காந்திருக்கீங்க?" - வீட்டு முன்றலில் நாற்காலியில் அமர்ந்தபடி யோசனையில் ஆழ்ந்திருந்த கந்தசாமியிடம் வினவினான் சுந்தரம். "யாரு சுந்தரமா? வாப்பா... அது ஒண்ணுமில்ல, இன்னிக்கு உலக அமைதி தினமில்லையா? அதான்." - என்று குசும்பாகக் கூறினார் கந்தசாமி. "உலக அமைதி தினம் - மாகாண சபைத் தேர்தல்! ஆஹா என்ன ஒரு பொருத்தம்?" "ஆமா சுந்தரம். நானும் அத தான் யோசிச்சேன். நீயே சொல்லிட்ட." "ஆமாண்ணே யாருக்கு வாக்களிச்சீங்க?" "தேர்தல் முடிவு வரட்டும், சொல்றேன்." "ஏன் அப்படி சொல்றீங்க?" "செவுத்துக்குக் கூட காதிருக்கும். யார் காதுல சரி விழுந்தா விவகாரமாகிப் போகுமடா." "அதுவும் சரிதாண்ணே! இந்த மாகாண சபைத் தேர்தல் பத்தி என்ன நினைக்கிறீங்க?" "ஒரு முடிவோட தான் வந்திருக்க போல?" "நம்ம என்ன முடிவெடுக்குறது? மக்கள் அவங்களோட முடிவ சொல்றதுக்கான 9 மணித்தியால கால அவகாசம் முடிஞ்சு போச்சு. நம்ம மன ஆறுதலுக்காக எதுனாச்சும் பேசலாமேன்னு தான் கேட்டேன்." ...