நட்சத்திர நிலவுகள்
என் வானில்
இல்லை
நிலவு கூட
நிலையாக இருப்பதில்லை
அடிக்கடி
தன் உருவத்தை
மாற்றி மாற்றிக் காட்டி
என்னை ஏய்க்கின்றது
கற்பனைகளில் கூட
கண்கட்டி வித்தை
காட்டுகின்றது
அது போலத்தான்
அழுகையும் சிரிப்பும்
அவ்வப்போது
என்னுள் மாறி மாறி
வருகின்றன
அடிக்கடி
நட்சத்திரங்களின்
நவரசம் காட்டி
மின்னி மறையும்
நிலவுகளாய்.......
என்னுடைய
உறங்கும் இரவுகளில்
கை விளக்குகளுடன்
நிலவொளியில்
ஆடிப்பாடியபடி பலர்.....
அவர்களின் கை
விளக்குகளைப்
போன்றவைதான்
எனது நிலவுகளும்
என் அனுமதியின்றியே
களவாடப்படும்!
ஒன்றல்ல இரண்டல்ல
என் கற்பனை
வானத்தில்
ஆயிரமாயிரம் நிலவுகள்
உலாப் போகின்றன
சில சமயங்களில்......
இல்லை
அடிக்கடி அவற்றுள்
சில நிலவுகள்
உதிர்ந்து விடுகின்றன
தீர்ந்து போன
நட்சத்திரங்களைப் போல.....
மின்னி மின்னி
மறைவதும் ஒளிர்வதுமாய்
விளையாட்டுக் கட்டுகின்றன
எவ்வாறாயினும்
என் வாழ்க்கையும்
மின்னும் நட்சத்திர
நிலவுகளாக..........
எனது இக்கவிதை இலங்கையின் பிரபல நாளிதழான "தினகரன்" இல் 18.07.2010 அன்று வெளியானது.
சூப்பர் சூப்பர் கவிதை.
ReplyDeleteஇதை வெளியிடாட்டி அது நாளிதளே இல்லீங்க....
அருமையான கவிதை...
ReplyDelete"தினகரன்" இல் ( 18.07.2010) வெளியானதற்கு வாழ்த்துக்கள்...
களவாடப்படும் நிலவுகள் அருமையான கற்பனை .அழகான வரிகள். வாழ்த்துகள்
ReplyDeleteஅழகான கற்பனை நண்பா...
ReplyDeleteஅழகான கவிதை...