குருவியின் பயணம்
"நாமும் ஒரு நாள்
பேரூந்தில் போனால்
எப்படியிருக்கும்?"
குருவி தீவிரமாய்
யோசித்தது
"முதலில்
பறக்கத் தேவையில்லை
பிறகு இரை தேடி
அலையத் தேவையில்லை
சொகுசாய்ப் போகலாம்
தூங்கிக் கொண்டு
போகலாம்"
இப்படியெல்லாம்
இருபது நிமிடம்
யோசித்த பிறகு
சட்டென்று குருவியின்
மனதில் ஒரு சலனம்
"பேரூந்து விபத்தில்
விழுந்து விட்டால்.......?
கொள்ளையர்கள்
கடத்திவிட்டால்........?
தீவிரவாதிகள்
குறிபார்த்து குண்டு
வைத்துவிட்டால்.....?
வேண்டாம்!
நமக்கு சிறகுகள்
நன்றாகத்தான்
இருக்கின்றன!
பேரூந்தை விட
வேகமாய்ப் பறக்க
நம்மால் முடியும்
நம் சிறகே
நமக்கு பேரூந்து
போதுமென்ற மனமே
பொன் செய்யும் மருந்து"
இப்போது
நிம்மதியாய்
உல்லாசமாய் தன்
சிறகை விரித்து வானில்
சிறகடித்துப் பறந்தது - 'குருவி'!
பேரூந்தில் போனால்
எப்படியிருக்கும்?"
குருவி தீவிரமாய்
யோசித்தது
"முதலில்
பறக்கத் தேவையில்லை
பிறகு இரை தேடி
அலையத் தேவையில்லை
சொகுசாய்ப் போகலாம்
தூங்கிக் கொண்டு
போகலாம்"
இப்படியெல்லாம்
இருபது நிமிடம்
யோசித்த பிறகு
சட்டென்று குருவியின்
மனதில் ஒரு சலனம்
Image Credit: Google |
"பேரூந்து விபத்தில்
விழுந்து விட்டால்.......?
கொள்ளையர்கள்
கடத்திவிட்டால்........?
தீவிரவாதிகள்
குறிபார்த்து குண்டு
வைத்துவிட்டால்.....?
வேண்டாம்!
நமக்கு சிறகுகள்
நன்றாகத்தான்
இருக்கின்றன!
பேரூந்தை விட
வேகமாய்ப் பறக்க
நம்மால் முடியும்
நம் சிறகே
நமக்கு பேரூந்து
போதுமென்ற மனமே
பொன் செய்யும் மருந்து"
இப்போது
நிம்மதியாய்
உல்லாசமாய் தன்
சிறகை விரித்து வானில்
சிறகடித்துப் பறந்தது - 'குருவி'!
எனது இக்கவிதை இலங்கையின் பிரபல நாளிதழான "வீரகேசரி" இல் 2008.06.01 அன்று வெளியானது.
வரிகள் நன்றாக இருக்கிறது என்பதை விட... வருத்தத்தை தான் தருகிறது...
ReplyDeleteபோதுமென்ற மனமே
ReplyDeleteபொன் செய்யும் மருந்தல்ல.....விஷம்????
நமக்குச் சிறகுகள் இல்லை...
ReplyDeleteநாம நடந்து தான் போகனும்....!!
பிறர் உழைப்பில் வாழ்ந்து
ReplyDeleteசுகம் காண நினைப்போரின் நினைப்பாக
குருவியின் நினைப்பை இணைத்துப்பார்த்தேன்
அருமை.எளிமையான வார்த்தைகளில்
மிகப்பெரிய விஷயத்தைச் சொல்லிப்போகும்
கவிதை மனம் கவர்ந்தது
தொடர வாழ்த்துக்கள்
கவிதையில் குருவியின் மன நிலையைவிட மனிதனின் நிலை மனதில் தோன்றி வருத்தத்தை வரவழைக்கிறது.
ReplyDeleteகுருவி மனிதனின் நிலையைப் பற்றி வருத்தப் படுவது போல் உள்ளது...
ReplyDeleteகவிஞனின் கற்பனை அபாரம்...
தொடருங்கள்...
கவிதை நல்லா இருக்கிறது...ஆனால் நம் நிலையை நினைத்தால் பயமாகவும் வருத்தமாகவும் இருக்கிறது...
ReplyDeleteநன்றி,
மலர்
http://www.tamilcomedyworld.com (100% காமெடி மட்டும் : தமிழ் காமெடி, டிவி நிகழ்சிகள், திரைப்படங்கள்)
மிக அருமையான கவிதை.....உங்கள் பகிர்வுக்கு நன்றி.....
ReplyDeleteநன்றி,
பிரியா
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
எங்க போனீங்க சீக்ரம் வாங்க. கல்யாண வைபோகம் போடுங்க...
ReplyDeleteThanks for sharing such a great article and it’s helpful for everyone. Great Post
ReplyDeletehttp://packers-and-movers-bangalore.in/
Packers and Movers Bangalore, Local Shifting Relocation and Top Movers Packers Bangalore.
ReplyDeletePackers and Movers Bangalore Household @ http://packersmoversbangalore.in/