Posts

Showing posts from November, 2024

என் சமையல் அனுபவ குறிப்பு - 01

Image
என் சமையல் அனுபவ குறிப்பு பாகம் 01 - சாப்பிட முன்  பேஸ்புக்கை நோண்டிக் கொண்டிருக்கும் போது அடிக்கடி சமையல் குறிப்புகள் தென்படும். எல்லாம் பார்க்க இலகுவான குறிப்புகள் தான். காணொளியாக பார்க்க அழகாகவும் இருக்கும். அவற்றில் செய்ய முடியும் என்று தோன்றுவதை மனைவிக்கு அனுப்பி வைப்பேன். சிலவற்றை எனது வாட்ஸப் செய்தியில் சேமித்தும் வைத்துள்ளேன். அப்படி இன்று சில சமையல் காணொளிகளை பார்க்க நேர்ந்தது. எல்லாம் பார்க்க ஒரே மாதிரியான பொருட்களை வைத்து செய்யக்கூடியவை. அவற்றில் இரண்டை தெரிவு செய்திருந்தேன். ஒன்று தோசை போன்றது. மற்றையது நூடில்ஸ் பக்கோடாவோ எதுவோ. நூடில்ஸ் பக்கோடா செய்ய நினைத்தாலும் தேநீர் அருந்தும் நேரம் கடந்துவிட்டதால் அந்த யோசனையை கைவிட்டேன்.  அடுத்தது மாவு தோசை என்று வைத்துக் கொள்ளுங்கள். காணொளியில் சொல்லப்பட்ட அளவு இரவு உணவுக்கு போதாது என்று கருதியமையால் காணொளியில் வழங்கப்பட்ட பாவனை அறிவுறுத்தல்களை மும்மடங்காக்க நினைத்து அதற்கேற்றாற்போலவே பொருட்களை தயார் செய்தேன். ஆனால் பாலுடன் கோதுமை மாவை கலக்கும் சந்தர்ப்பம் வந்தபோது இரண்டு மடங்கு கோதுமை மாவை மாத்திரமே சேர்க்க முடிந்தது. சரி ம...

'அந்திமழை' இணைய இதழில் வெளியான 'இனிப்பில் வாழ்பவன்' கட்டுரையை முன்வைத்து...

Image
இனிப்பில் வாழ்பவன் - அந்திமழை இணையத்தளம்   'அந்திமழை' இணைய இதழில் வெளியான 'இனிப்பில் வாழ்பவன்' கட்டுரையை முன்வைத்து...  கட்டுரையின் ஆரம்பத்திலேயே ஒரு படம். அதற்கு 'கேப்சன்' என்று சொல்லக்கூடிய ஒரு விளக்கம். ரவி பேலட் வரைந்திருந்த அந்த படத்திற்கு 'இனிப்புத் தீவிரவாதி' என்று விளக்கம் தரப்பட்டிருந்தது. ஆம். தீவிரவாதிதான். பாரா ஒரு தீவிரவாதி. எதில்? தான் நம்பும் அனைத்திலும். எழுத்தில் ஒரு தீவிரவாதி. எதையும் எழுதக்கூடிய தீவிரவாதி. கூட்டம், பாராட்டு என்று எதன் பின்னாலும் போகாத ஒரு தீவிரவாதி. வாசகர்களை மட்டுமே நம்பும் தீவிரவாதி. இறுதியாக உலகமே தேடக்கூடிய இனிப்புத் தீவிரவாதி.  ஒரு பக்கம் அட இந்த மனிதர் எப்படி இவ்வளவு இனிப்பை உண்கிறார் என்ற ஆச்சரியம். மறுபுறம் இத்தனை வகை இனிப்பும் இந்த மனிதருக்கு எப்படி கிடைக்கிறது என்ற ஆச்சரியம். அதிலும் ஆச்சரியம், அதை எப்படி ருசிக்க வேண்டும் என நாலு பக்கம் நீளமாக ரசித்து எழுதும் பதிவு. அந்த பதிவை வாசித்துவிட்டு நாமும் ஒரு இனிப்பை சுவைக்கலாம் என்று போனால் நமது முகத்திற்காகவே தயாரிக்கப்பட்டதுபோல ஒன்றைத் தருவார்கள். தண்டச்செலவு அல்...

வாசிப்பும் பகிர்வும் - 03 | அக்னிச் சிறகுகள் - அப்துல் கலாம் | வாசிப்பு அனுபவக் குறிப்புகள்

Image
அப்துல் கலாம் இன்றளவும் நம்மால் வியந்து பார்க்கப்படும் ஒருவர். பல சாதனைகளுக்குச் சொந்தக்காரர் என்றாலும் தன்னடக்கம் மிக்கவர். இனிமையாக பழகும் ஒருவர். கரையோரக் கிராமமொன்றில் பிறந்து ஏவுகணை நாயகனாகி நாட்டையும் ஆண்ட ஒருவர். இத்தனை வெற்றிகளைக் குவித்த ஒருவர் வியந்து பார்க்கப்படுவதில் தவறேதுமில்லை.  அப்துல் கலாமின் அக்னிச் சிறகுகள். இந்த நூல் பற்றித்தான் இன்று பேச வேண்டும். உண்மையில் இது ஒரு சுயசரிதை. ஆனால் அந்த வகைக்குள் மாத்திரம் இதனை அடக்கிவிட முடியாது. விஞ்ஞானிகள் வாசிக்க வேண்டிய நூல் இது. மனிதர்களை அறிந்து கொள்ள விரும்பும் மக்கள் வாசிக்க வேண்டிய நூல் இது. சுயமுன்னேற்றம் வேண்டுவோர் வாசிக்க வேண்டிய நூல் இது. சாதிக்கத் துடிப்பவர்கள் வாசிக்க வேண்டிய நூல் இது. இப்படி அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற, அனைவரும் தமது வாழ்வில் ஒருமுறையேனும் கட்டாயம் வாசித்துவிட வேண்டிய நூல் இது.  மத நல்லிணக்கம் தொடர்பில் நாம் இன்று அதிகம் பேசுகிறோம். அப்துல் கலாம் தனது புத்தகத்தில் இப்படி கூறுகிறார். "கோயிலை சுற்றிலும் பெருந்திரளாக வந்து கொண்டிருக்கும் பக்தர்களையும் கடலில் அவர்கள் புனித நீராடுதலையும் வைதிக ...