சிகரம் வலைப்பூங்கா - 01

வணக்கம் நண்பர்களே! தமிழ் இணைய உலகில் ஆயிரமாயிரம் அருமையான தமிழ்ப் பதிவுகள் கொட்டிக் கிடக்கின்றன. அவற்றில் எங்கள் கண்ணில் பட்ட சில நல்ல பதிவுகளை சிகரம் வலைப்பூங்காவில் தொகுத்து வழங்க எண்ணியுள்ளோம். உங்கள் கருத்துக்களை எம்மோடு பகிர்ந்து கொள்ளுங்கள். 'சமூகத்தில் மாற்றத்தை விரும்பும் ஒரு சாமானிய ஊழியனின் குரல், உழைக்கும் மக்களின் எதிரொலி' என்னும் மகுட வாசகத்தைத் தாங்கி படைப்புகளை வழங்கி வருகிறது ' ஒரு ஊழியனின் குரல் ' வலைத்தளம். அந்த வலையில் இருந்து இன்று நம் வாசிப்புக்கு தீனி போடப் போவது ' சமரசம் ' சிறுகதை. நம் வாழ்க்கையில் நாம் பல விடயங்களுக்காக சமரசம் செய்து கொள்ள வேண்டியிருக்கிறது. ஏன் சில நேரங்களில் சமரசங்களால் ஆனதாகவே மாறி விடுகிறது. அப்படி ஒரு நாதஸ்வர கலைஞர் சமரசம் செய்து கொள்ள வேண்டியேற்படும் சூழலை அற்புதமாக தனது கதையில் சொல்லியிருக்கிறார் கதாசிரியர். அவசியம் வாசிக்க வேண்டிய சிறுகதை - சமரசம் . 'எண்ணங்களை எழுத்துக்களாக, கருத்தைக் கவர்ந்தவற்றை ஒளிப்படங்களாகக் கோர்த்தபடி' பயணித்துக் கொண்டிருக்கும் வலைப்பதிவு தான் நமது ' முத்த...