ஒரு நாடும் 225 பொய்யுரைஞர்களும் - 03
'ஆகஸ்ட் 17 அன்று எனக்கெதிராகப் பேசிய அனைவருக்கும் தக்க பதில் அளிப்பேன்' என முன்னாள் ஜனாதிபதி மகிந்த சூளுரைத்துள்ளார். பெருவாரியான வாக்குகள் மற்றும் ஆசனங்களுடன் தனக்கேற்ற அரசை அமைக்கும் பலம் தனக்குக் கிடைக்கும் என அவர் திடமாக நம்புகிறார். ஜனவரி 8 ஆம் திகதி அமைதியான முறையில் ஆட்சியை ஒப்படைத்துவிட்டு வெளியேறும் போதிலிருந்தே இந்த எதிர்பார்ப்பு அவருக்குள் இருந்து வருகிறது. நாடாளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மையை மகிந்த பெறுவாராயின் தனது 3வது முறையும் ஜனாதிபதியாகும் கனவுக்கு நிச்சயம் உயிர் கொடுப்பார். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த தோற்றுப் போனார். ஆனாலும் 45% வாக்குகளை பெற்றிருந்தார். தமிழர் பிரதேசங்களில் மாத்திரமே அதிக வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். ஏனைய பிரதேசங்களில் மிகக் குறைவான வாக்கு வித்தியாசத்தையே மகிந்த கொண்டிருந்தார். இது சிறுபான்மை மக்களின் ஏகோபித்த எதிர்ப்பையும் பெரும்பான்மையினரின் மத்தியில் இழக்கப்படாத ஆதரவையும் வெளிக்காட்டுகிறது. தமிழ் மக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் மகிந்தவைப் புறந்தள்ளினர். மகிந்தவும் சிங்கள மக்களின் வாக்குகளாலேயெ த...