ஒரு நாடும் 225 பொய்யுரைஞர்களும் !
வணக்கம் வாசகர்களே! இலங்கையில் "சிறந்த பொய்யுரைஞர்கள் 225 பேரை தேர்ந்தெடுக்கும் மாபெரும் விழா" எதிர்வரும் ஆகஸ்ட் 17 ஆம் திகதி நடைபெறவுள்ளது. அதிகூடிய பொய்யுரைஞர்களை பெறும் கூட்டணி க்கு "பிரதமர்" பரிசும் வழங்கப்படும். இது என்னடா புதுசா இருக்கேன்னு பாக்குறீங்களா? அட , ஒன்னுமில்லீங்க. நாடாளுமன்றத் தேர்தலைத்தான் அப்படிச் சொன்னேன். 225 என்கிற எண்ணிக்கையை சற்று தீவிரமாக சிந்தித்திருந்தால் உங்களுக்கு உடனே பிடிபட்டிருக்கும். 2015.06.26 ஆம் திகதி நள்ளிரவுடன் நாடாளுமன்றம் கலைக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார். தற்போது தொங்கு நாடாளுமன்றமே காணப்படுகின்றது. இவ்வருடம் ஜனவரியில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் முன்னைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை வெற்றி கொண்டதன் மூலம் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியானார். பிரதமரை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கே உள்ளது. தனது வெற்றிக்கு உதவியதன் பேரில் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக்கினார் மைத்திரிபால. ஆயினும் பிரதமர் பதவியை ரணில் தக்க வைத்துக் கொள்ள வேண்டுமாயின் ஆகஸ்டில் ந...