மனமே.... மனமே.....
வணக்கம் நண்பர்களே! மனதில் தோன்றிய சில விடயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள எண்ணியுள்ளேன். முதலாவது நமது வலைத்தள நண்பர் வெற்றிவேல் அவர்களின் "வானவல்லி" புதினம் பற்றியது. வலைத்தளத்தில் வெளிவந்து பின், இடைநிறுத்தப்பட்டு முழுமையாக புத்தகமாகவே வெளியிடுகிறேன் என்று வெற்றிவேலினால் அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து இவ்வருட துவக்கத்தில் வெளிவரவிருந்தது. என்றாலும் இன்னும் வெளியீட்டுத் திகதி உறுதிப்படுத்தப்படவில்லை. "வானவல்லி"யின் வரவுக்காய் ஆவலுடன் காத்திருக்கிறேன். கல்கியின் "பொன்னியின் செல்வன்"ஐப் போல ஒரு பெரிய வரலாற்றுப் புதினம் இது. நாளும் பொழுதும் இதனை வெளியிடும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார் வெற்றிவேல். விரைவில் "வானவல்லி சிறப்பு நேர்காணல் - உங்கள் வெற்றிவேல்" உடன் சிகரம் வலைத்தளத்தில் வெளியாகும். அடுத்தது , நான் எனது வலைத்தளத்தினை மேம்படுத்துவதற்காக பேஸ்புக் (facebook ) பக்கம் ஒன்றை ஆரம்பித்திருப்பது நீங்கள் அறிந்ததே. நான் கடந்த ஆறு மாதங்களாக வலைத்தளப் பக்க...