பாசத்தில் பாரபட்சம் - சரியா?
வணக்கம் வலைத்தள வாசகர்களே! நான் அண்மையில் வாசித்த ஒரு செய்தி. பெற்றோரின் பாரபட்ச பாசம் காரணமாக 6 வயது தங்கையைக் கத்தியால் குத்திக் கொன்ற 13 வயது அக்கா. தன்னை விட தன் தங்கை மீது அக்காளின் மனதில் முளைவிட்ட வன்மத்தின் கோர விளைவு இது. இச்சம்பவத்திற்கு பெற்றோரே முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட பிள்ளைகளைக் கொண்ட பெரும்பாலான பெற்றோர் செய்யும் தவறே இது. குழந்தைகள் வளர்ந்து கொஞ்சம் பெரியவர்களாகி விட்டால் அவர்கள் எல்லாவற்றையும் தாமாகவே புரிந்து கொள்ள வேண்டும் என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால் அந்த பருவத்தில் தாம் எப்படி இருந்தோம் என்பதை அந்தப் பெற்றோர் சிந்தித்துப் பார்ப்பதில்லை. பெற்றோரின் பாசத்தின் மீதான எதிர்பார்ப்பு பிள்ளைகளுக்கு குறிப்பிட்ட வயது வரை இருந்து கொண்டே இருக்கும். இந்த வயதெல்லை ஆளுக்காள் மாறுபடலாம். அதனை கண்டறிந்து பாசம் காட்ட வேண்டியது பெற்றோரின் கடமை. அதிலும் ஒன்றுக்கு மேற்பட்ட பிள்ளைகள் உள்ள வீட்டில் இந்த வயதெல்லை இன்னும் அதிகமாகும். எல்லோருக்குமே தொட்டில் பருவத்தில் தாம் நடத்தப்பட்ட விதம் நினைவில் இருப்பதில்லை. அவர்கள...