மன்னிக்க வேண்டும்!
மன்னிக்க வேண்டும்! எனது வலைத்தள நண்பர்களிடம் பகிரங்க மன்னிப்புக் கோர விரும்புகிறேன். ஜெயலலிதாவின் ஊழல் வழக்கு குறித்து facebook இல் நான் வெளியிட்ட இரு பதிவுகளைத் தொகுத்து " மாண்புமிகு முதலமைச்சர்! " என்ற தலைப்பில் "சிகரம்" வலைப்பதிவில் பதிவிட்டிருந்தேன். ஆனால் அதற்கு தீய எண்ணம் கொண்டவர்களால் தவறான வார்த்தைப் பிரயோகங்களுடன் 51 பின்னூட்டங்கள் [ Comments ] வழங்கப்பட்டிருந்தன. சுமார் 26 மணித்தியாலங்களுக்குப் பின்னரே அதனை நான் பார்த்தேன். உடனடியாக அனைத்தையும் எனது பக்கத்தில் இருந் து நீக்கிவிட்டேன். எனது வலைத்தள நண்பர்கள் யாரேனும் இதனைக் கண்ணுற்றிருந்தால் என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். இந்த நாசகார வேலைக்கு நான் பொறுப்பல்ல என்றாலும் மிகக் கேவலமான , தரமற்ற , தவறான வார்த்தைப் பிரயோகங்களுடனான பின்னூட்டங்கள் உங்கள் மனங்களைப் புண்படுத்திவிடக் கூடாது என்பதே என் எண்ணம். இத்தகைய நாசகார வேலையை செய்தவர்களுக்கு அதற்கான பலனை காலம் நிச்சயம் வழங்கும். சிகரம்பாரதி இதழியலாளர் / எழுத்தாளர் / ஆசிரியர் வலைப்பதிவுகள் : சிகரம், சிகரம் 3 , தூறல்கள். http://newsigara...