வலை ஓலை - எழுத்தாணி - சொல்

இணைய உலகில் தமிழை வளம்பெறச் செய்ததில் வலைத்தளங்களுக்கு மிக முக்கிய பங்கு உண்டு. பிளாக்கர் மற்றும் வேர்ட்பிரஸ் ஆகிய இரண்டும் வலைத்தள சேவைகளை வழங்கினாலும், பிளாக்கரிலேயே அதிக அளவு வலைத்தளங்கள் உருவாகின. தமிழ் வலைத் தளங்களுக்கு கிட்டத்தட்ட 15 ஆண்டு வரலாறு இருக்கலாம் என நினைக்கிறேன். ஆரம்பகால வலைத்தள எழுத்தாளர்களுக்கே தமிழ் வலையுலகின் அத்தனை பெருமைகளும் சாரும் என்றே நான் சொல்வேன். காரணம், அவர்கள் அனைத்தையும் உருவாக்கினார்கள். வலைத்தள சேவைகள் தமிழில் கிடைக்க அவர்கள் பெரும் பங்காற்றினார்கள். பல வலைப்பதிவர்கள் தமிழில் உருவாக அவர்களே காரணமாய் அமைந்தார்கள். அவர்களில் பலரும், அவர்களைப் பின்தொடர்ந்து வந்த பலரும் நவீன எழுத்தாளர்களாய் உருவாகினர். தமிழ் வலைத்தளங்களை அப்போது நடத்திச் செல்வதில் இருந்த சிரமம் இப்போது இல்லை. வலைத்தளங்கள் தற்போது வெகுவாக முன்னேறிவிட்டன. எந்தவொரு சிரமமும் இல்லாமல் யுனிகோடில் தட்டச்சு செய்ய முடிகிறது. அத்துடன், வலைத்திரட்டிகள் தமிழ் வலையுலகில் ஆற்றிய பங்கு மறக்க முடியாது. தமிழ்மணம், இன்ட்லி மற்றும் தமிழ் 10 ஆகியன அவற்றில் வெகு பிரபலமானவை....