கில்லி முதல் பைரவா வரை...

நடிகர் விஜய்யின் ( இளைய தளபதி என்று சொல்ல எந்த அவசியமும் நேரவில்லை இதுவரைக்கும் ) கில்லி திரைப்படம் நேற்று ( 2017.01.29) சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இது 2004 ஆம் ஆண்டு வெளியான திரைப்படமாகும். இறுதியாக அண்மையில் ( 2017 ஜனவரி ) பைரவா திரைப்படம் வெளியாகியிருந்தது. 2004 கில்லிக்கும் 2017 பைரவாவுக்கும் இடையில் 21 திரைப்படங்கள் நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகியுள்ளன. இவற்றில் கில்லிக்கு அடுத்து மதுர, திருப்பாச்சி, சுக்ரன், சிவகாசி மற்றும் நண்பன் ஆகிய ஐந்து திரைப்படங்கள் மட்டுமே எனது ரசனைக்கான தெரிவு. கில்லியும் இந்த ஐந்து திரைப்படங்களும் கூட மிகைப்படுத்தப்பட்ட கற்பனை, வணிக நோக்கு மற்றும் இன்னபிற அம்சங்கள் கொண்டவையாக இருந்தாலும் நடிகர் விஜய்யின் இயல்பான, சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களைக் கவர்ந்திழுத்தன என்றே சொல்லலாம். இவை தவிர வேறெந்தத் திரைப்படங்களிலும் நல்ல கதையம்சமோ அல்லது நடிகர் விஜய்யின் குறிப்பிடத்தக்க நடிப்போ இல்லை என்பதே உண்மை. இயக்குனர்களே விஜய்யின் நடிப்புத் திறன் வீழ்ச்சியடைந்தமைக்கு முக்கிய காரணம். தமிழில் வெளிவரும் திரைப்படங்களில் ஒன்றிரண்டு தவிர எல்லாமே வ...