சிகரம் பாரதி 5/50

வணக்கம் வலைத்தள வாசகர்களே! 2016.09.27 கூகிளுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். எது கூகிளின் உண்மையான பிறந்தநாள் என்பதில் ஒரு குழப்பம் நிலவி வருகிறது. செப்டெம்பர் 5 ஆம் திகதியா அல்லது 27 ஆம் திகதியா என்பதில் மாறுபட்ட கருத்துக்கள் உள்ளன. கூகிள் என்ன காரணத்துக்காய் தன் பிறந்தநாளை மாற்றியமைத்தது என்று தெரியவில்லை. ஆனாலும் வாழ்த்துகிறேன். கூகிள் அல்லோ செயலியின் வெற்றிகரமான வெளியீட்டிற்குப் பின் கூகிள் பிறந்தநாள் சிறப்பானதாக உள்ளது. காரணம் கூகிளுக்கு வயது பதினெட்டு. இனி கூகிள் ஒரு இளைஞர். வாக்குரிமை கிடைத்தாலும் ஆச்சரியமில்லை. இணையத் தேடலில் ஆரம்பித்து பல்வேறு தளங்களில் கால் பதித்து வெற்றியைக் குவித்து வருகிறது கூகிள். இன்னும் பல வெற்றிகளைப் பெற வாழ்த்துக்கள்! #HBDGoogle 2016.09.28 ஆட்டாமாவுக்கு அடுத்த பிள்ளை தான் கோதுமை மாவு - காலையிலேயே கேட்ட தத்துவம்! அம்மா , அப்பாவெல்லாம் யாருன்னு கேட்கப்படாது. 2016.09.29 அவசர சிகிச்சை வண்டி - Ambulance. ஒரு உயிரைக் காப்பாற்றப் போராடும் வாகனம். நாளாந்தம் பல உயிர்களைக் காப்பாற்றும் சேவையை வழங்கி வருகிறது. நெரிசல் மிக்க போக்குவரத்து சாலைகளில...