போர்க்குற்றமும் சர்வதேச சமூகமும் .

மே 18, 2009. தமிழர்களோ அல்லது தமிழர் நலனில் அக்கறையுள்ள எவருமோ இந்தத்திகதியை அவ்வளவு இலகுவில் மறந்திருக்க மாட்டார்கள். இலங்கை அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான மூன்று தசாப்தகால யுத்தம் முற்றுமுழுதாக முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நாள்.தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டு விட்டதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்ட நாள். வீதிகள் தோறும் சிங்களவர்கள் இலங்கையின் தேசியக் கொடியை ஏந்திக்கொண்டு கொட்டும் மழையிலும் கூட வெற்றிக்களிப்பிலும் தமிழர்களை வென்றுவிட்டோம் என்ற ஆணவத்திலும் மிதந்து தமிழர்களின் உணர்வுகளை சீண்டிப்பார்த்த நாள். மறந்திருக்க மாட்டார்கள் தான் - ஐந்து வருடங்கள் கடந்துவிட்டன என்றபோதும் மறந்திருக்க மாட்டார்கள்தான். ...