சென்னைக்கு விசில் போடு!
ஐ.பி.எல். என்கிற இந்தியன் பிரிமியர் லீக் 20-இருபது கிரிக்கட் போட்டிகளின் இறுதிக் கட்டத்தை நெருங்கி விட்டோம். இன்னும் இரண்டே போட்டிகள். 7 வது தொடரின் மகுடம் யாருக்கென்று தெரிந்துவிடும். என்னைப் பொறுத்தவரை இந்த ஐ.பி.எல் இன் ஆரம்பத்தில் இருந்தே சென்னைக்கு தான் ஆதரவு. முதல் காரணம் தோனி . அடுத்தது தமிழ்நாட்டை பிரதிநிதித்துவப் படுத்துவது என்பதாலும் இன்னபிற காரணங்களாலும். இதோ இந்தத் தொடரின் இறுதிப் போட்டிக்கு தெரிவாகப் போவது யார் என்பதைத் தீர்மானிக்கப் போகும் ஆட்டத்திற்கும் சென்னை தேர்வாகியிருக்கிறது. இன்று நடைபெறவிருக்கும் சென்னை எதிர் பஞ்சாப் போட்டியில் வெல்லும் அணிதான் இறுதிப் போட்டியில் கொல்கத்தாவை எதிர்த்தாடவிருக்கிறது. இந்த முறையும் ஐ.பி.எல் க...