Posts

Showing posts from July, 2024

பா. ராகவனின் புதிய வெளியீடுகள் பற்றிய சில குறிப்புகள்: ஜென் கொலை வழக்கு + ஜந்து

Image
ஜென் கொலை வழக்கு + ஜந்து  பா. ராகவனின் புதிய வெளியீடுகள் பற்றிய சில குறிப்புகள்:  (புத்தக முன்னட்டை வெளியீட்டு திட்டத்தை முன்னிட்டு பா ராகவன் வழங்கிய குறிப்புகளுடன் வெளியாகும் கட்டுரை)  --- 01. ஜென் கொலை வழக்கு நவீன நாசகார ஜென் கதைகள் சில குறிப்புகள் நுண் கதைகள், குறுங்கதைகள், மைக்ரோ கதைகள் என்று பலவாறாக இன்றைக்குக் குறிப்பிடப்படும் மிகச் சிறிய கதை வடிவங்களின் தொடக்கம் ஜென் கதைகள், பஞ்சதந்திரக் கதைகள், ராமகிருஷ்ணரின் குட்டிக்கதைகள் இயற்றப்பட்ட காலத்திலேயே நிகழ்ந்துவிட்டது. பா. ராகவனின் இந்த ஜென் கொலை வழக்கு என்னும் நவீன நாசகார ஜென் கதைகள், ஜென் கதை வடிவத்தைப் புறத் தோற்றமாகக் கொண்டு எழுதப்பட்ட நுண் கதைகளே. மேலோட்டமான பார்வையில் இவை நாம் இதுவரை வாசிக்காமல் இருந்துவிட்ட ஜென் கதைகளைப் போலவே தோற்றமளிக்கும். ஏனெனில் இக்கதைகளில் நிஜமான ஜென் குருமார்கள் வருகிறார்கள். அவர்கள் வாழ்ந்த காலம், அன்றைய மன்னர் வம்சங்கள், அக்கால வாழ்க்கை முறை, அரசியல், அவற்றின்மீது மதங்களும் சித்தாந்தங்களும் செலுத்திய செல்வாக்கு எல்லாம் அப்படி அப்படியே பதிவாகும். இதில் எந்த இடத்தில் புனைவு ஒரு பூனையைப் போலப் புகுந்து