காரில் ஊர்சுற்றும் தம்பதி - புரியாத வரலாற்று தொடர் -இன்னும் சில...!

சஞ்சிகை வாசிப்பு என்பது மாறுபட்ட ஒரு அனுபவம். பத்திரிகையைப் போல ஒரு கலவையான வாசிப்பு அனுபவத்தை சஞ்சிகைகள் வழங்கும். சஞ்சிகைகளிலும் பல வகைககள் உள்ளன. அவற்றுள் இன்று நான் பேசப் போவது ஜனரஞ்சக சஞ்சிகை ஒன்றைப் பற்றி. குங்குமம் சஞ்சிகையை PDF வடிவில் வாசிக்கக் கிடைத்தது. நீண்ட நாட்களுக்குப் பின்னர் ஒரு வாசிப்பு அனுபவம். முதலில் tinpin stories எனும் மலையாள யூடியூப் சேனல் குறித்த அறிமுகம் பிடித்திருந்தது. தமது பயண அனுபவங்களை யூடியூப் வழியே சொல்லும் தம்பதிகளின் முயற்சி இது. இந்த யூடியூப் சேனல் மிக அருமையாக இருக்கிறது. எனக்கு மலையாளம் தெரியாது என்றாலும் ஓரளவுக்குப் புரிகிறது. இணைப்பு: https://www.youtube.com/c/TinPinStories/featured அடுத்தது கே.என். சிவராமின் ஒரு வரலாற்று தொடர். அடி முடி எதுவும் புரியவில்லை. இது 135 ஆவது அத்தியாயம். இப்போது வாசித்தால் எப்படி புரியும்? ரத்த மகுடம் சரித்திர தொடரை தான் சொல்கிறேன். ஆனால் வாசிக்க நன்றாக இருக்கிறது. இனி தொடர்வோம். நண்பர் வெற்றிவேல் தனது இணையத்தளத்தில் எழுதும் கரிகாலன் தொடரையும் வாசிக்க வேண்டும். ஒருநாள் கல்லூரி முத...