வலைப்பதிவு வழிகாட்டி - 04
வணக்கம் நண்பர்களே! இது மிக நீண்ட நாட்களுக்கு முன்னர் எழுத ஆரம்பித்து இடைநடுவில் கைவிட்ட பதிவு. முந்தைய பதிவுகளைப் படிக்க: வலைப்பதிவு வழிகாட்டி - 01 வலைப்பதிவு வழிகாட்டி - 02 வலைப்பதிவு வழிகாட்டி - 03 இன்றைய பதிவு: இன்று விட்ட இடத்தில் இருந்து மீண்டும் தொடர்வதற்கு சில காரணங்கள் உண்டு. 1. பதிவை மீண்டும் தொடர்ந்து புதிய வலைப்பதிவர்களுக்கு வழிகாட்டுவது. 2. வலைப்பூவில் (பிளாக்கர்) ஏற்பட்டிருக்கும் புதிய மாற்றங்களை உலகுக்கு தெரியப்படுத்துவது. இரண்டும் ஒன்றே என்பதால் இப்படியே வாசிக்கலாம். வலைப்பூவில் சில மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பாரிய மாற்றங்கள் என்று சொல்வதற்கில்லை என்றாலும் வலைப்பதிவர்களை கவரக் கூடிய மாற்றங்களாகவே இருக்கின்றன. வலைப்பதிவர்கள் எதிர்பார்த்த புதிய தீம்கள் எவையும் கிடைக்கவில்லை என்பது ஏமாற்றமே. மாற்றங்கள்: 01. பதிவுகளின் பட்டியலை காண்பிக்கும் முகப்புத் திரை மாறியிருக்கிறது. இது எந்தவொரு பதிவும் இல்லாத புதிய வலைப்பதிவு காட்சியளிக்கும் முறை. இது பதிவுகள் உள்ள வலைப்பதிவு ...