வெள்ளித்திரை-தோழா!

அனைவருக்கும் இனிய வணக்கங்கள். தோழா ! அருமையான திரைப்படம். பொதுவாகவே நடிகர் கார்த்தியின் திரைப்படங்கள் விறுவிறுப்பாக இருக்கும். தோழா நகைச்சுவையுடன் வலிகளைக் கலந்து தந்திருக்கிறது. முதலில் தோழா திரைப்படத்தில் என்னைக் கவர்ந்த சில காட்சிகளை இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன். # "நாலு மாசத்துக்கு நீ சத்தியவானா இருக்கணும்" "தமிழ்ல சொல்லுங்க" "நா சொன்னது தமிழ்தான்டா" # "உன் பெட்ரூமை காட்டுறேன் வா" "இது பெட்ரூமா?" "ஆமா. இது ரூமு. இது பெட்டு" என முதியோர் இல்ல பராமரிப்பாளர் கூறுவது சிரிப்பு. #விக்ரமாதித்யாவை (நாகார்ஜுனா) கவனித்துக் கொள்ளும் பொறுப்புக்கு ஆள் எடுப்பது அருமை. # வேலை கிடைத்ததும் தனது படுக்கை அறையையும் குளியலறையையும் பார்த்து பிரமிப்படைவது அருமை. # கண்காட்சியில் ஓவியத்தை பார்த்துவிட்டு தானும் ஓவியம் வரைய முற்படுவது. # நாகார்ஜுனா மணிக்கூண்டை உற்றுப்பார்ப்பதைக் கண்டதும் "இதெல்லாம் விற்க மாட்டாங்க" என கார்த்தி கலாய்ப்பது. # பராமளிப்பாளர் என்பதற்காக காவலாளி போல விறைப்பாக இல்லாமல் விளையாட்டுத் த...