வலைச்சரத்தில் களம் காண்கிறது சிகரம்!
வணக்கம் வலைத்தள நண்பர்களே! நலம், நலமறிய ஆவல். " வலைச்சரம் " பற்றி அறியாத யாருமே தமிழ் வலைப்பதிவர்களாக இருக்க முடியாது. புதிய வலைப்பதிவுகளை அறிமுகப்படுத்துதல், வலைச்சர ஆசிரியப் பொறுப்பினை அளிப்பதன் மூலம் ஆசிரியராக வருபவரின் வலைத்தளத்துக்கான அங்கீகாரத்தைப் பெற்றுக் கொடுத்தல், வலைப்பதிவுகளையும் இடுகைகளையும் பிறர் அறிய வாய்ப்பளித்தல் என பல சேவைகளை வலைச்சரம் ஆற்றி வருகிறது. வாரம் ஒரு ஆசிரியர் தனக்குப் பிடித்த , தான் அறிந்த வலைப்பதிவுகளை அறிமுகம் செய்வார். அந்த வகையில் பலரும் வலைச்சர ஆசிரியர் பொறுப்புக்காக காத்து நிற்கும் இந்த வேளையில் "சிகரம்பாரதி" ஆகிய என்னைத் தேடி வலைச்சர ஆசிரியர் பொறுப்பு வந்திருக்கிறது. 30.06.2014 முதல் தொடங்கும் வாரத்திற்கு ஆசிரியராகப் பொறுப்பேற்கும் நான் 06.07.2014 வரை வலைச்சரம் ஆசிரியராக எனது கடமையை ஆற்றவுள்ளேன். இதுவரை மூன்று முறை வலைச்சரம் சார்பாக அறிமுகம் பெற்றுள்ள நான் இன்று ஏனையோரை அறிமுகம் செய்யக் கிடைத்தமை மிகப்பெரும் பாக்கியமாகும். என்னை அறிமுகம் செய்த பதிவுகள் இவைதான். நான் ...