வெட்கத்தைக் கேட்டால் என்ன தருவாய்?

வணக்கம் வாசகர்களே! வெட்கத்தைக் கேட்டால் என்ன தருவாய்? என்ன கேள்வி இது? இது கேள்வியல்ல. நான் அண்மையில் வாசித்து ரசித்த காதல் கவிதைகள் அடங்கிய நூலொன்றின் தலைப்பு. தபூ சங்கர் என்பவர் எழுதி 2008 இல் வெளியான நூல் இது. நூலுக்கு இடப்பட்டிருக்கும் தலைப்பைத் தவிர உள்ளே அடங்கியிருக்கும் எந்தவொரு கவிதைக்கும் தலைப்பிடப்படவில்லை. எல்லாக் கவிதைகளுமே உணர்வுகளின் வெளிப்பாடுகளைப் போலவே அமைந்திருப்பது நம்மை ரசிக்க வைக்கிறது. தனது நூலை தபூ சங்கர் இப்படி அறிமுகம் செய்து வைக்கிறார். இது வெறும் புத்தகமல்ல. இதைத் தொடுபவன் காதலனாகிறான் தொடுபவள் காதலியாகிறாள். அறிமுகமே நம்மை ஈர்த்து நூலுக்குள்ளே இழுத்துச் செல்கிறது. இந்த வரிகளைத் தவிர தபூ சங்கர் தனியானதொரு முன்னுரையை நூலுக்கு வழங்கவில்லை. ஆயினும் கவிஞர் அறிவுமதி, நா.முத்துக்குமார் போன்றோரின் நூல் மதிப்புரைகள் காணப்படுகின்றன. இந்நூலானது இரண்டு பகுதிகளாக பிரித்து எழுதப்பட்டிருக்கிறது. முதல் பகுதி காதலன் தன் காதலைப் பற்றி கவிதை கூறுவது போலவும், இரண்டாம் பகுதி காதலி தன் காதலைப் பற...