நான் அறியாத நீ...!

உன்னைப் பழகி உன் குணமறிந்து விருப்பம் தெரிந்து தேவையறிந்து எண்ணம் புரிந்து எல்லாம் அறிந்து காதல் செய்யும் ஆசை எனக்கில்லை வேண்டாம் உன்னை நான் அறிய வேண்டாம் நான் அறியா நீ தான் வேண்டும் தூரத்தில் உன் முகம் பார்த்து கண்ணோடு கண் பேசி எனக்குள் நானே அர்த்தம் கற்பித்து அதுதான் நிஜமென எண்ணி வாழும் அந்த வாழ்க்கை போதும் எனக்கு வேண்டாம் நான் அறிந்த நீ வேண்டாம் உன் குணம் நான் விரும்பாமல் இருக்கலாம் உன் எண்ணம் ஒவ்வாததாயிருக்கலாம் உன் ஆசை பேராசையாய் இருக்கலாம் ஆகவே நான் அறிந்த நீ வேண்டாம் நானறியா நீ தான் என் தேவை பொய்யெனத் தெரிந்தும் அதை மெய்யெனக் கொள்ள நான் தயார் நானறியாத நீ நானும் நீயுமாக இருந்தால்...!