ராஜா ராஜா தான்!

இளையராஜா! எப்போதுமே இசையின் ராஜா தான். அண்மையில் அவரது பிறந்த நாளின் போது வானொலியைக் கேட்க நேர்ந்தது. அப்போது சில பாடல்களை கேட்டேன். என்ன சொல்ல? ஆஹா.... சிறப்பு... ராஜா ராஜாதி ராஜனிந்த ராஜா... இதயம் ஒரு கோவில் என்ன சத்தம் இந்த நேரம் குருவாயூரப்பா பாடறியேன் படிப்பறியேன் சொர்க்கமே என்றாலும் தென்மதுரை வைகை நதி கரகாட்டக்காரன் இதெல்லாம் எப்போது கேட்டாலும் சலிக்காத பாடல்கள். இது மட்டும் தான் என்று சொல்ல முடியாது. கேட்டது இவ்வளவு தான். வருடம் முழுவதும் இளையராஜாவின் பாடல்களைக் கேட்கச் சொன்னாலும் கேட்டுக் கொண்டே இருக்கலாம். அப்படி ஒரு மாயவித்தை அந்த பாடல்களுக்குள் இருக்கிறது. அப்போதே எழுத வேண்டும் என நினைத்தேன். ஆனால் நேரம் கிடைக்கவில்லை. மீண்டும் சந்திப்போம்!