சிகரம் பணிக்கூற்று - 2017.07.01 - 2018.05.31

சிகரம் திருவள்ளுவராண்டு 2048 ஆனி 17, 2017.07.01 - சனிக்கிழமை. மகுட வாசகம் தமிழ் கூறும் நல்லுலகு! தூரநோக்கு தமிழ் மொழியை மொழி, கலை, கலாசாரம், அறிவியல், கணிதம் மற்றும் தொழிநுட்பம் என அனைத்திலும் உலக மொழிகளனைத்தையும் விட தன்னிறைவு கொண்ட மொழியாக உருவாக்குதலும் உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களுக்கான நிரந்தர முகவரியை உருவாக்குதலும்! எமது இலட்சிய நோக்கு * தமிழர் வரலாறு, பழந்தமிழ் நூல்கள், வரலாற்று ஆதாரங்கள் போன்றவற்றை ஆவணப்படுத்தல், காட்சிப்படுத்தல் மற்றும் எண்ணிமமாக்கல். * தமிழில் உலகின் மிகப்பெரிய எண்ணிம நூலகத்தையும் தரவு மையத்தையும் உருவாக்குதலும் உலகின் முதற்தர தமிழ்ச் செய்திச் சேவையாகத் தொழிற்படுதலும். * உலகின் மொழிகள் அனைத்திலும் தலை சிறந்த படைப்புகள் அனைத்தையும் தமிழில் வழங்குதலும் கடந்தகால மற்றும் தற்கால தமிழ்ப் படைப்புக்களை எண்ணிமமாக்கலும் படைப்பாளிகளை ஊக்குவித்தல், கௌரவித்தல். * அனைத்து செயற்பாடுகளும் சகல இன மக்களையும் மையப்படுத்தியதாக அமைதலும் ஒன்றிணைத்து செயற்படுதல் ...