பாரா வின் ஒரே ஒரு அறிவுரை

சிலருக்கு அப்பாவைப் பிடிக்கும். பலருக்கு அம்மாவைப் பிடிக்கும். ஒரு சிலருக்கு யாரையுமே பிடிப்பதில்லை. நமக்கு அப்பாக்கள் இருக்கும் வரை அவர்களைப் பிடிக்குமா இல்லையா என்பது தெரிவதே இல்லை. ஏனெனில் கண்டிப்புடனேயே கடைசி வரை இருந்துவிடுவது தான். சிறுவயதில் அப்பாவை இழந்தவர்களுக்குத்தான் அந்த வலி அதிகம் புரியும். இது ஒரு சிறுகதை. அப்பாவை இழந்த ஒரு மகனின் கதை. இருபத்தைந்து வருடங்களாக தன் கூடவே இருந்த தந்தையின் இறுதிக் கிரியை நிகழ்வும் அந்த நிகழ்வின் தாக்கத்தினால் மகனின் எண்ண ஓட்டத்தில் வந்து போகும் சில சம்பவங்களும் தான் கதை. வலிமைமிக்க சொற்களினால் கதையை செதுக்கியுள்ளார் கதாசிரியர் பாரா. ஒவ்வொரு எழுத்துக்களும் நமது இதயத்தின் அடி ஆழத்தைத் தொட்டுவிட்டுத் திரும்புகின்றன. பார்த்தசாரதி ராகவன் என்னும் பாரா தமிழகத்தின் தவிர்க்க முடியாத அடையாளம் எனலாம். 'சென்னை தவிர இன்னோர் இடத்தில் என்னால் ஒரு சில தினங்களுக்குமேல் இருக்க முடியுமா என்று எப்போது வெளியூர் போனாலும் சந்தேகம் வரும். இந்நகரின் சத்தம் பாதுகாப்பு உணர்வைத் தருகிறது. இதன் அசுத்தமும் ஒழுங்கீனங்களும் அவசரமும் என் இயல்புக்குப் பெரிதும் பொருந்...