சிகரம் - குறிக்கோள்கள் ( 2006-2017)

01. எவ்விதமான பக்கச்சார்புமின்றியும் அச்சமுமின்றியும் நீதித்தன்மையுடன் உடனுக்குடன் உண்மையானதும் தெளிவானதும் உறுதியானதுமான செய்திகளை மக்களுக்கு வெளிப்படுத்தல். 02. தமிழையும் தமிழரையும் பாதுகாத்தலும் சகல துறைகளிலும் முன்னேற்றுதலும். 03. ஒழுக்கம், நேர்மை, நேரம், கடமை,கட்டுப்பாடு, கல்வி என்று சகல துறைகளிலும் தேர்ச்சி பெற்றவர்களாக எதிர்கால சட்டபூர்வ நிறுவன முகாமைத்துவக்குழு , ஊழியக் குழு என்பவற்றை அமைத்தல். 04. மக்களின் பிரச்சினைகளை சரியாக இனங்கண்டு அவற்றுக்கு உடன் தீர்வு காணுதல். தமிழர்களின் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை வழங்கபடுவதோடு சகல மக்களின் பிரச்சினைகளுக்கும் நிறுவனம் குரல் கொடுக்கும். 05.01. நடுவுநிலைமையுடன் செயற்படுதலும் ஒற்றுமையையும் சமாதானத்தையும் மக்கள் மத்தியில் நிலை நாட்டுதல். 05.02. சேவைநோக்குடன் செயற்படும் அதேவேளை அது நிறுவனத்தை பாதிக்காத வகையிலான சேவைகளாக அமைக்கப்படுவதுடன் உச்ச இலாபம் தரக்கூடிய துறைகளையும் முன்னுரிமைப்படுத்தி செயற்படல். 06. வெளியிடப்படும் நூல் சார்ந்த அல்லது அச்சு சார்ந்த துறையில் (பத்திரிகைகள், புத்தகங்கள்) தகவல் சேகரிப்ப...