சித்திரைத் திருநாள் நல்வாழ்த்துக்கள்!
என் இனிய நண்பர்கள், அன்பர்கள், வாசகர்கள் மற்றும் சக தமிழர்கள் அனைவருக்கும் இனிய சித்திரைத் திருநாள் நல்வாழ்த்துக்கள். தமிழர்களின் புத்தாண்டு எது? இந்தக் கேள்விக்கான தீர்க்கமான விடை இன்னும் யாரிடமும் இல்லை. ஆளும் அரசுகளும் தத்தமது கொள்கைகளுக்கேற்ப ஒவ்வொரு நாளை பின்பற்றி வருகின்றன. தை யா? சித்திரை யா? தமிழர் புத்தாண்டு எது? நம் தமிழறிஞர்கள் பலர் பலமுறை ஆராய்ந்து தைத்திருநாளே தமிழர் புத்தாண்டு என அறிவித்திருக்கிறார்கள். ஆனாலும் மக்கள் மத்தியில் குழப்பம் நீடித்த வண்ணமே உள்ளது. சித்திரைத் திருநாள் தமிழர்களின் வாழ்வியலோடு ஒன்றிவிட்ட ஒன்றாகவும் மாறிப்போய் இருக்கிறது. தை தான் நமக்கு முதல் மாதம். தமிழில் மாதங்களை சொல்லும் போது தையில் இருந்து தான் ஆரம்பிக்கிறோம். வருடம் முதல் மாதத்தில் இருந்து ஆரம்பிப்பது தானே முறை? சித்திரையில் நிகழ்வது இராசி மாற்றம். அதாவது சனிப்பெயர்ச்சி போன்ற ஒன்று மட்டுமே. தமிழரின் அடையாளம் விவசாயம். விவசாயிகளின் திருநாளும் தை தான். மேலும் சித்திரை இடைநடுவில் வரும் மாதம். வருடப்ப்பிறப்பு வருடத்தின் நடுப்பகுதியில் நிகழ்வது சாத்தியம் தானா? ஆகவே தைத்திருநாள...