தமிழ் மொழி - இன்றும் - நாளையும்! - 3
வணக்கம் தமிழே! நவீன தொழிநுட்பம் நமக்குத் தந்த வாட்ஸாப்பில் தமிழ் கூறும் நல்லுலகம் என்னும் அருமையான குழு ஒன்றுள்ளது. இங்கு தமிழ் மொழி குறித்து பல விடயங்கள் விரிவாக ஆராயப்படுகின்றன. இவ்வாரம் முதல் நாளொரு தலைப்பில் விவாதித்து வருகிறோம். அந்த வகையில் இன்றைய (05-06-07/03/2017) தலைப்பின் கீழான விவாதத் தொகுப்பின் மூன்றாம் பகுதி உங்களுக்காக இங்கே: முதலாம் பகுதி: தமிழ் மொழி - இன்றும் - நாளையும்! - 1 இரண்டாம் பகுதி: தமிழ் மொழி - இன்றும் - நாளையும்! - 2 மூன்றாம் பகுதி : சிகரம் பாரதி : தமிழில் கலந்துள்ள பிறமொழி சொற்களை கண்டறிந்து அவற்றை ஆய்வுக்குட்படுத்தி அவசியமானவற்றை பயன்பாட்டுக்கு எடுத்துக்கொள்ள வேண்டும். மழை இயற்கை. எல்லோருக்கும் பொதுவானது. மொழி செயற்கை. நமக்காக நாம் உருவாக்கிக் கொண்டது. அதில் தேவையான மாற்றங்களை உருவாக்குவதில் தவறில்லை. முனீஸ்வரன் : நானும் ஏற்கிறேன் ஏற்கனவே கலந்த சொற்களை மாற்ற முயற்சிப்பது முடியாது இனி கலக்காமல் தடுக்க முயல்வதே நன்று. மாற்றம் என்பதை நிறைய பேர் தவறாக நினைக்கிறார்கள். சொல்லுங்க மாற்றம் என்றால் என்ன? சிகரம் ப...