வணக்கம் நண்பர்களே! நலம், நலமறிய ஆவல். 'சிகரம்' இணையத்தளம் ஜூலை முதலாம் திகதி முதல் தமிழ்ப்பணியாற்றிவருவது நாம் அறிந்ததே. தமிழ் கூறும் நல்லுலகின் பங்களிப்போடு வெற்றிகரமாக எமது செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளோம். இதுவரை காலமும் என் வெற்றிக்குப் பின்னால் இருந்த அனைவரையும் 'சிகரம்' இணையத்தளத்தை வெற்றிபெறச் செய்ய பங்களிக்க வருமாறு அன்போடு அழைக்கிறேன். எமது மகுட வாசகம்: தமிழ் கூறும் நல்லுலகு! எமது தூரநோக்கு: தமிழ் மொழியை மொழி, கலை, கலாசாரம், அறிவியல், கணிதம் மற்றும் தொழிநுட்பம் என அனைத்திலும் உலக மொழிகளனைத்தையும் விட தன்னிறைவு கொண்ட மொழியாக உருவாக்குதலும் உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களுக்கான நிரந்தர முகவரியை உருவாக்குதலும்! அழகு தமிழில் கவிதைகள், கதைகள், கட்டுரைகள், ஆய்வுக் கட்டுரைகள் மற்றும் தமிழ் சார்ந்த படைப்புகள் என உங்கள் திறமைகளுக்குக் களம் அமைக்க நாம் தயாராக உள்ளோம். இலக்கியம், விஞ்ஞானம், அரசியல், கணிதம் மற்றும் பொருளியல் என எது சார்ந்த படைப்புகளாக இருந்தாலும் சிகரம் இணையத்தளத்துக்கு அனுப்பி வையுங்கள். தமிழால் இணைவோம்! தமிழை வளர்ப்போம்! ...