விறல்வேல் வீரனுக்கோர் மடல் – பதில் கடிதம்
வணக்கம் வாசகர்களே! இணையம் ஆரம்பிக்கப்பட்டு 25 ஆண்டுகள் பூர்த்தி ஆகிவிட்டன. இணையம் நன்மை, தீமை என இரண்டையும் இந்த உலகத்திற்கு வழங்கி வந்தாலும் இணையம் எனக்களித்த பரிசாக வெற்றிவேல் உடனான நட்பைக் காண்கிறேன். என் கடிதத்திற்கு வெற்றியின் பதில் கடிதம் கிட்டியுள்ளது. அக்கடிதம் இதோ உங்கள் பார்வைக்கு. பதில் கடிதம் விரைவில்........ விறல்வேல் வீரனுக்கோர் மடல் – பதில் கடிதம் பேரன்புள்ள நண்பனுக்கு, வணக்கம். நான் நலம் நண்பா. நீயும் நலமாக இருப்பாய் என்று நம்புகிறேன். கடிதத்தைத் தொடங்கும் முன்பு எனது நல்வாழ்த்துகளை உனக்குத் தெரியப்படுத்திக் கொள்கிறேன். திருமண நல்வாழ்த்துக்கள் நண்பா. ‘செம் புலப் பெயல் நீர் போல; அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே’ என்ற சங்கத் புலவனின் வாக்கினைப் போன்று தாங்கள் இருவரும் மகிழ்ச்சியுடனும், அன்புடனும் வாழ வாழ்த்துகிறேன். நீ உனது திருமணச் செய்தியை அனுப்பியபோது என்னால் வாழ்த்து மட்டுமே தெரிவிக்க முடிந்தது. நேரில் வந்து வாழ்த்த விரும்பியும், இயலாமல் போய்விட்டது. தொடர்பு கொண்டு பேசவும் இயலவில்லை. உனது இல்வாழ்க்கை எப்படி சென்று கொண்டிருக்கிறது நண்பா? முதல...