புதிய சொல் !
வணக்கம் வாசகர்களே! நலம், நலமறிய ஆவல். இந்த இருபத்தொன்றாவது நூற்றாண்டு புதுமைகள் நிறைந்தது. தொழிநுட்பம், அறிவியல், சமூகம், இலக்கியம் என அனைத்திலும் நாள்தோறும் புதிய விடயங்கள் இடம்பெறுகின்றன. அந்த வகையில் இலக்கியத்தில் இடம்பெற்றுள்ள ஒரு புதிய விடயம் குறித்து இன்று பேசவுள்ளோம். பேசலாம் வாங்க. "புதிய சொல்" - இலங்கையின் இலக்கியத்துறையில் புதுவரவாய் தடம்பதித்துள்ள ஓர் காலாண்டு சஞ்சிகை. யாழ் மண்ணைக் தளமாகக் கொண்டு இவ்வாண்டு (2016) ஜனவரி முதல் வெளிவரத்துவங்கியுள்ளது. காத்திரமான படைப்புகளுடன் களம் கண்டுள்ள "புதிய சொல்" தொடர்ந்தும் இதே பாதையில் தடம் மாறாமல் பயணிக்க வேண்டும். இலங்கையின் தமிழ் இலக்கியத்துறையில் சஞ்சிகைகளுக்கு முக்கியமான பங்குண்டு. தோன்றுவதும் பின் சுவடில்லாமல் மறைந்து போவதுமாய் பல்வேறு தமிழ் சஞ்சிகைகள் இலங்கையின் தமிழ் இலக்கியத்துறையில் வேரூன்ற முயற்சி செய்திருக்கின்றன. ஆனால் தடைகளைத் தகர்த்தெற...