டுவிட்டர் @newsigaram - 02
# உரிய நேரத்தில் உரிய இடத்தில் வெளிப்படுத்தப்படாத கோபமும் பாசமும் பின்னர் வேறெப்போதும் பயனற்றது ; தேவையற்றது ; பாசாங்கானது. # சிறிய துன்பங்களை மறக்கச் செய்வது பெரிய துன்பங்களே! # கடந்த காலம் நமக்கு பாடமாய் இருக்க வேண்டும், பாரமாய் இருக்க கூடாது. # உலகத்தை திரும்பிப்பார்க்க வைக்க ஒரே வழி, உலகத்தின் பின் நின்று கொள்வது தான்..! # விவசாயம் பொய்த்துப்போன வயலினால் ஏற்படும் சோகத்தை 'வயலினால்' சொல்லிவிடமுடியாது! # நெருங்கிய உறவினர்களினால் வரும் பாலியல் துன்புறுத்தல்கள் மிகவும் கொடுமையானவை. மற்ற உறவுகளைக் காப்பாற்ற பெண் பொறுமை காக்கவேண்டியுள்ளது. # நீண்ட இடைவெளிக்குப்பின் ஆற்றில் நீர் வந்தால் காய்ந்த மணல் உறிஞ்சிக்கொள்வது போலே உன்னை ஒரு பிரிவுக்குப்பின் பார்க்கையில் விழிகள் நனைகின்றன. # இங்கு காணாமல் போன விமானம் ,கப்பல் ,ராக்கெட் எங்கே இருக்கு?னு மை போட்டுப்பார்த்து சொல்லப்படும் - கொல்லிமலை சித்தர்! # நியூசிலாந்து நாட்டில்....... # கடவுளைத் தவிர வேறு எவரையும் எல்லா நேரத்திலும் நேசிக்க முடியாததுதான் மனிதனின் மகத்தான பலவீனம் -பபி. #காதல் நோயை குணப்படு...