இலங்கையின் சுதந்திரத்திற்கு வயது அறுபத்தாறு!
வலைத்தள வாசகர்கள் அனைவருக்கும் நீண்ட இடைவெளிக்குப் பின்னரான அன்பான வணக்கங்கள். இன்று இலங்கையின் 66 வது சுதந்திர தினம். 1948 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 04 ஆம் திகதி ஆங்கிலேயரிடமிருந்து இலங்கை சுதந்திரம் பெற்றது. ஆயினும் மே மாதம் 22 ஆம் திகதி, 1972 இலேயே அதாவது 24 வருடங்களுக்குப் பின்னரே இலங்கை குடியரசாக்கப் பட்டது. அன்று முதல் இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசு என அழைக்கப்பட்டு வருகிறது. 1948 இற்குப் பின் இலங்கை பெற்ற சுதந்திரம் சிங்களவர்களுக்கு மட்டும் என்றாகிப் போனது. ஆங்கிலேயர்களுக்கு எதிராக தமிழர்களுடன் ஒன்றிணைந்து போராடிய சிங்களவர்கள் சுதந்திரத்திற்குப் பின் தமிழர்கள் மீது அடக்குமுறையினைப் பிரயோகித்தனர். இலங்கையின் முத...