மரண வீதி!
வணக்கம் வாசகர்களே! நீண்ட இடைவெளிக்குப் பின்னர் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. ஆனால் மகிழ்ச்சியான செய்தியுடன் சந்திக்க முடியவில்லை. ஒரு விபத்து மற்றும் இரு கொலைகளால் நிகழ்ந்த மரணங்களைப் பற்றிப் பேசுவதே பதிவின் நோக்கம். முதலாவது பேரூந்து விபத்து பற்றியது. இலங்கையின் பண்டாரவளை - பூனாகலை பிரதேசத்தில் இடம்பெற்ற பேரூந்து விபத்தில் பத்துப் பேர் மரணமடைந்துள்ளதுடன் இருபத்தைந்து பேர் காயமடைந்துள்ளனர். பதினாறு வயது மாணவி முதல் ஐம்பத்தைந்து வயது முதியவர் வரை பாகுபாடின்றி காலன் காவு கொண்டுள்ளான். பேரூந்தானது கடந்த நான்காம் திகதி மாலை ஏழு மணியளவில் பாதையை விட்டு விலகி சுமார் 350 அடி பள்ளத்தில் வீழ்ந்துள்ளது. இரண்டாவது ஐந்து லட்ச ரூபாய் பணத்தை அபகரிப்பதற்காக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். இது அனுராதபுரம் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. அடுத்தது, யாழில் இளம் பெண்ணொருவர் ஐந்து பேரினால் கடுமையான பாலியல் வன்புணர்வுக்குள்ளாக்கப் பட்டு கிணற்றில் வீசப்பட்டமையினால் மரணமடைந்துள்ளார். பெற்றோர், ஊரார் மற்றும் மகளிர் அமைப்புகள் இணைந்து கவனயீர்ப்பு போராட்டமொன்றை ந...