சாதனைகளும் சோதனைகளும்......
அன்பார்ந்த வலைத்தள வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். நேற்று நீண்ட நாட்களுக்குப் பின் பதிவிட்ட போது நீங்கள் தந்த உற்சாக வரவேற்பு என்னை இன்றும் பதிவுலகின் பக்கம் அழைத்து வந்திருக்கிறது. நேற்று நான் ஊடகப் பாதையில் பயணிக்க ஆரம்பித்து 7 வருடங்கள் பூர்த்தி ஆனதையிட்டு பதிவிட்டிருந்தேன். அதன் போது குறிப்பிட வேண்டும் என நினைத்துக் கொண்டிருந்த இன்னுமொரு மைல்கல்லை மறந்துவிட்டேன். இந்த "சிகரம்" வலைத்தளம் ஆரம்பித்து ஒரு வருடம் கடந்த மே மாதம் இரண்டாம் திகதியோடு பூர்த்தி ஆகியிருக்கிறது. மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்தும் உங்கள் ஆதரவும் ஆசிகளும் எனக்குத் தேவை. மனதில் எத்தனை எத்தனையோ ஆசைகளும் கனவுகளும்.... அத்தனையையும் நிறைவேற்ற எண்ணினால் திரும்பும் பக்கமெல்லாம் சிக்கல்கள். சிக்கல்களைத் தீர்த்துவிட்டு நிமிர்ந்தால் காலம் எல்லை கடந்து விட்டிருக்கும். எதிர்காலத்தை நினைத்தால் மலைப்பாகத் தான் இருக்கிறது. ஆனால் எதனையும் விட்டுவிட முடியாது. போராடவேண்டும். போராடலாம்..... எத்தனை காலத்திற்கு? மாற்றுத் திறனாளிகளே எவ்வளவோ சாதிக்கும் போது நம்மால் முடியாதா என்ன? அதுவும் உங்களைப் போன்றோர் துணையிருக்கும் ப...