குருவியின் பயணம்

"நாமும் ஒரு நாள் பேரூந்தில் போனால் எப்படியிருக்கும்?" குருவி தீவிரமாய் யோசித்தது "முதலில் பறக்கத் தேவையில்லை பிறகு இரை தேடி அலையத் தேவையில்லை சொகுசாய்ப் போகலாம் தூங்கிக் கொண்டு போகலாம்" இப்படியெல்லாம் இருபது நிமிடம் யோசித்த பிறகு சட்டென்று குருவியின் மனதில் ஒரு சலனம் Image Credit: Google "பேரூந்து விபத்தில் விழுந்து விட்டால்.......? கொள்ளையர்கள் கடத்திவிட்டால்........? தீவிரவாதிகள் குறிபார்த்து குண்டு வைத்துவிட்டால்.....? வேண்டாம்! நமக்கு சிறகுகள் நன்றாகத்தான் இருக்கின்றன! பேரூந்தை விட வேகமாய்ப் பறக்க நம்மால் முடியும் நம் சிறகே நமக்கு பேரூந்து போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து" இப்போது நிம்மதியாய் உல்லாசமாய் தன் சிறகை விரித்து வானில் சிறகடித்துப் பறந்தது - 'குருவி'! எனது இக்கவிதை இலங்கையின் பிரபல நாளிதழான "வீரகேசரி" இல் 2008.06.01 அன்று வெளியானது.