நீ - நான் - காதல் - 04

கருவிழியிரண்டு 
கண்கொட்டாமல் 
பார்க்குதென்னை
பலப் பல கனவுகள் 
காண்கின்றேன் 
கயல்விழிகளில் 


ஒரு பார்வைக்குள் 
ஓராயிரம் பிரிவுகள் 
வெட்கப் பார்வை 
மோகப் பார்வை 
அன்புப் பார்வை என 
இன்னும் பல 

எத்தனை தடவை 
எப்படிப் பார்த்தாலும் 
அத்தனையிலும் தெரிவது 
அகத்தினில் தேங்கிக்கிடக்கும் 
கற்கண்டு உள்ளத்தாள்
கன்னியவள் காதல்!

Comments

  1. காதல் ரசம் சொட்டும் பாடல்..... வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி நாகராஜ்.

      Delete
  2. அழகான கவிதை பாரதி... நீண்ட நாள் கழித்து வலைப்பூ பக்கம் வந்துருக்கீங்க... மகிழ்ச்சி...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் வெற்றி. உங்கள் அன்பான வாழ்த்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி.

      Delete
  3. கவிதை சிறப்பாக உள்ளது நண்பா.

    ReplyDelete

Post a Comment

உங்கள் கருத்துகள் தான் எங்களுக்கான கைதட்டல்கள். பதிவைப் பற்றிய எண்ணங்களை தயங்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் விமர்சனங்களை வரவேற்கிறோம்.

சிகரம்