வேலைக்கு போறேன்!

நாளைக்கு நான் வேலைக்கு போறேன் நண்பர்களே! பத்துச் சாமான் சுத்திக்குடுத்து பத்துரூபா சம்பாதிக்கப் போறேன் நண்பர்களே குடும்பத்துல கஷ்டமுங்க கல்விக்குக் காசில்லிங்க கனவெல்லாம் கலைஞ்சுடுச்சு நாடகமும் முடிஞ்சிருச்சு அடுத்த வேஷமும் போட்டுக்கத்தான் நேரமும் வந்துருச்சு படிக்கப் பிடிக்கலே பள்ளிக்கூடத்தை பிடிச்சிருக்கு வாழப் பிடிக்கலே வாழ்க்கையைப் பிடிச்சிருக்கு நல்லாச் சொன்னிங்க சிநேகிதர்களே பொழைக்கத் தெரியாதவன் இவன்னு பொழைக்கத்தானுங்க போறேன் போய்ட்டு வாறேன் தோழர்களே! இக்கவிதை இலங்கையின் பிரபல மலையக வார இதழான "சூரியகாந்தி" இதழில் 03.06.2009 இல் வெளியான எனது கவிதை. இது மலையக இளைஞர்களை எண்ணி எழுதப்பட்டதாகும். வேலைக்கு போறேன்! https://newsigaram.blogspot.com/2012/...