BB Tamil 2 | Week 08 | Day 54 | பிக் பாஸ் தமிழ் 2 | வாரம் 08 | நாள் 54 | பியார் பிரேமா காதல்

'பியார் பிரேமா காதல்' படக்குழுவினர் பிக் பாஸ் வீட்டுக்கு வந்திருந்தனர். பிக் பாஸ் முடிவதற்குள் இந்த ஆண்டுக்கான தமிழ்ப்படங்கள் எல்லாம் வெளியாகிவிடும் போல இருக்கிறது. அந்த அளவுக்கு திரைப்பட முன்னோட்டங்கள் பிக் பாஸ் வீட்டில் இடம்பெறுகிறது. பிக் பாஸ் முதலாம் பருவ போட்டியாளர்களாக ஹரிஷ் கல்யாண் மற்றும் ரைசா ஆகியோரும் இயக்குனரும் வந்திருந்தனர். 

மூவரும் நீண்ட நேரத்தை பிக் பாஸ் வீட்டில் செலவிட்டனர். ஹரிஷ் போட்டியாளர்களை மதிப்பிட்டிருந்த விதம் சிறப்பாக இருந்தது. 'பியார் பிரேமா காதல்' திரைப்பட முன்னோட்ட காணொளி காண்பிக்கப்பட்டது. ஹரிஷ் மற்றும் ரைசா ஜோடிப் பொருத்தம் சிறப்பாக இருந்தது. மூவரும் கேள்வி கேட்டு ஆம், இல்லை பதில்களை கேட்டுப் பெற்றனர். எல்லாம் பிக் பாஸோட வேலையாதான் இருக்கும். 



யாஷிகா - மஹத் இடையிலான நட்பு யாஷிகாவின் மனதைப் பாதித்திருக்கிறது. மஹத் விளையாட்டுத்தனமாக இருந்தாலும் அவர் யாஷிகாவின் மீது காண்பிக்கும் அன்பு இருவருக்குமிடையிலான நெருக்கத்தை அதிகரித்திருக்கிறது. கடந்த முறை ஓவியா ஆரவ் மீது அன்பு கொண்டது போல இதுவும் மாறக் கூடும். வெளியுலகத் தொடர்புகள் இல்லாத நிலையில் கொஞ்சம் அன்பு கிடைத்தாலும் மனம் அதையே நாடும். 

எது எப்படி இருந்தாலும் பிக் பாஸ் கடந்த முறை போல உயிரோடு விளையாடாமல் இந்த முறையாவது இது தொடர்பில் தீவிர கவனம் செலுத்துவார் என நம்புவோமாக. இன்று வேறு முக்கியமான நிகழ்வுகள் எதுவும் இல்லை. போட்டிகளும் இல்லை. நமக்கும் இதுவும் ஒரு நாள் தான் என்பதாய்க் கடந்திருக்கிறது. சனி ஞாயிறுகளில் என்ன நடக்கும் என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம். 

#BiggBossTamil #VivoBiggBoss #KamalHassan #VijayTV #BiggBossVote #BiggBossVoteTamil #BiggBossVoteOnline #Bigg_Boss_Tamil_Elimination #Bigg_Boss_Tamil_daily_updates #Bigg_Boss_tamil_watch_Online #SIGARAMCO

Comments

Popular posts from this blog

உங்கள் மனம் கவர்ந்த பிக்பாஸ் போட்டியாளர் யார்? Who is your favourite Bigg Boss Contestant?

பத்தி எழுத்து என்றால் என்ன? | கட்டுரை | வல்லினம் | ஸ்ரீதர் ரங்கராஜ்

சிக்கலில் சிக்கிய பிக் பாஸ்? இரண்டாம் வாரத்துடன் இடைநிறுத்தம்?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2019-21 | இருபது-20 கிரிக்கெட் | சிகரம் ஆடுகளம்

பிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - ஜூன் மாதம் ஆரம்பம்!

ஐ.பி.எல் ஆட்ட விவரங்கள் | புள்ளிப் பட்டியல் IPL 2018 SCHEDULE & RESULTS #IPL2018 - WEEK 01

Bigg Boss Tamil Vote (Online Voting) Season 02 | Public Opinion Poll | Week 13 Voting | Google Vote

பிக் பாஸ் தமிழ் - 02 எப்படி அமையும்?

ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா - 2018 ஏப்.07 இல் ஆரம்பம்! #IPL2018

பிக்பாஸ் உத்தியோக பூர்வ அறிவிப்பு மே 26 ஆம் திகதி!