Saturday, January 7, 2017

சிகரம் பாரதி - 0002

வணக்கம் வலைத்தள வாசகர்களே! இந்த வாட்ஸாப்பைக் கண்டுபிடித்தாலும் பிடித்தார்கள் எங்கும் எதிலும் ஒரே கேலியும் கிண்டலும்தான். சில நேரம் ஒரே விடயத்தை பலர் ஒரே நேரத்தில் நமக்கு அனுப்பினால் சிரிப்புக்கு பதில் கோபமே வரும். என்னதான் இருந்தாலும் வாட்ஸாப் சிரிப்புக்கு நிகரேதும் இல்லை. அதில் ஒன்று உங்களுக்காக இங்கே. சிரிப்பு வராவிட்டால் நிறுவனம் பொறுப்பல்ல. 

# இலங்கை அரசின் அடுத்த அதிரடி திட்டம்: அத்தனையும் இலவசம்!

இலவச 4G சிம் – ஜனவரி 15-ம் திகதி முதல் BSNL புது 4G சிம் இலங்கையில் வெளி வர இருக்கின்றது…

சிம் விலை வெறும் 100 ரூபாய் மட்டுமே. அழைப்பு நேரம்  2500 ரூபாய் இலவசம். ஒரு நாளைக்கு 1000 குறுஞ்செய்தி  இலவசமாக வழங்கப்படும்.

ஒரு வருடத்திற்கு வாடிக்கையாளர் அழைப்பு ஒலி  இலவசம். ஆறு மாதம் இணையப் பாவனை இலவசம். கிட்டதட்ட 1200 GB இலவசமாக வழங்கப்படுகிறது.

ரோமிங் கட்டணம் கிடையாது. தேசிய அடையாள அட்டை அவசியம். ஆனால்………………

சமிக்ஞைக் கோபுரம் மட்டும் நீங்கதான் நட்டுக்கணும். கோபப்படாதீங்க. எனக்கும் இப்படித்தான் அனுப்பினாங்க…. #

என்ன வாசகர்களே, சிரிப்பு வருதா இல்ல கோவம் வருதா? எது வந்தாலும் இதை அப்படியே உங்கள் வாட்ஸாப் குழுவில் பகிர்ந்து உங்கள் தாகத்தைத் தீர்த்துக் கொள்ளுங்கள். 

8 comments:

  1. ஆமாம்.... ஆமாம்.... எனக்கும் வந்தது. இலங்கையில் பி எஸ் என் எல் உண்டா என்ன!

    ReplyDelete
    Replies
    1. இல்லை. நகைச்சுவைக்காக உருவாக்கப்பட்ட செய்தி இது!

      Delete
  2. WhatsApp தொல்லை தாங்க முடியவில்லை..... :)

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...

கருத்து கந்தசாமி முகப்பலகை

பிடிச்சிருந்தா பகிரலாமே?