Sunday, January 1, 2017

வருக வருக 2017ஆம் ஆண்டே!

வணக்கம் வலைத்தள வாசகர்களே! இனிய ஆங்கிலப் புத்தாண்டு 2017 இற்கான வாழ்த்துக்களை அனைவருக்கும் தெரிவித்துக் கொள்வதில் மிக்க மகிழ்ச்சி. ஞாயிறு தினத்தில் , ஒரு விடுமுறை நாளில் ஆங்கிலப் புத்தாண்டை கொண்டாடிவிட்டு களைத்துப் போயிருப்பீர்கள். இன, மத, மொழி, சாதி வேறுபாடின்றி அனைவரும் இந்த ஆங்கிலப் புத்தாண்டை மகிழ்ச்சியுடன் வரவேற்றிருப்போம். பல சபதங்களையும் உறுதி மொழிகளையும் எடுத்திருப்போம். பல புதிய விடயங்களைத் துவங்கியிருப்போம். நல்லது.

ஆனால் நாம் நமது தமிழர் புத்தாண்டான தைத்திருநாளை இத்தனை கோலாகலத்துடன் வரவேற்போமா? நமது புதிய எண்ணங்களை தைத்திருநாளில் ஆரம்பிக்க எண்ணுவோமா? இல்லை. மற்ற எல்லா நாட்களையும் போல தைத்திருநாளையும் ஒரு சாதாரண நாளாகக் கருதி கடந்து போவோம். ஆங்கிலம் உலகளாவிய தொடர்பு மொழியாக இருக்கலாம். அதனால் நாமும் ஆங்கிலப் புத்தாண்டை வரவேற்கலாம். ஆனால் நமது தாய்தமிழ்க் கலாச்சாரத்தை மறப்பது , உதறித்தள்ளுவது நியாயமாகுமா? 

தைத்திருநாளே நமது புத்தாண்டு தினமாகும். அதனை கொண்டாட வேண்டியது நமது கடமை. பணத்தையும் நேரத்தையும் வாரி இறைக்காமல் பயனுள்ள வகையில் தமிழர் புத்தாண்டைக் கொண்டாடி நமது தமிழ்க் கலாச்சாரத்திற்கு பெருமை சேர்ப்போமாக!

10 comments:

  1. அருமையான பதிவு

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி நண்பரே! உங்களுக்கும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

      Delete
  2. Replies
    1. நிச்சயமாக. நன்றி நண்பரே!

      Delete
  3. நல்ல கருத்து க்கு மகிழ்ச்சி

    ReplyDelete
  4. தமிழர் திருநாளை கொண்டாடுவோம்.

    ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. நிச்சயமாக. உங்களுக்கும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

      Delete

Related Posts Plugin for WordPress, Blogger...

கருத்து கந்தசாமி முகப்பலகை

பிடிச்சிருந்தா பகிரலாமே?