Posts

Showing posts from September, 2016

சிகரம் பாரதி 5/50

Image
வணக்கம் வலைத்தள வாசகர்களே! 2016.09.27 கூகிளுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். எது கூகிளின் உண்மையான பிறந்தநாள் என்பதில் ஒரு குழப்பம் நிலவி வருகிறது. செப்டெம்பர் 5 ஆம் திகதியா அல்லது 27 ஆம் திகதியா என்பதில் மாறுபட்ட கருத்துக்கள் உள்ளன. கூகிள் என்ன காரணத்துக்காய் தன் பிறந்தநாளை மாற்றியமைத்தது என்று தெரியவில்லை. ஆனாலும் வாழ்த்துகிறேன். கூகிள் அல்லோ செயலியின் வெற்றிகரமான வெளியீட்டிற்குப் பின் கூகிள் பிறந்தநாள் சிறப்பானதாக உள்ளது. காரணம் கூகிளுக்கு வயது பதினெட்டு. இனி கூகிள் ஒரு இளைஞர். வாக்குரிமை கிடைத்தாலும் ஆச்சரியமில்லை. இணையத் தேடலில் ஆரம்பித்து பல்வேறு தளங்களில் கால் பதித்து வெற்றியைக் குவித்து வருகிறது கூகிள். இன்னும் பல வெற்றிகளைப் பெற வாழ்த்துக்கள்! #HBDGoogle 2016.09.28 ஆட்டாமாவுக்கு அடுத்த பிள்ளை தான் கோதுமை மாவு - காலையிலேயே கேட்ட தத்துவம்! அம்மா , அப்பாவெல்லாம் யாருன்னு கேட்கப்படாது. 2016.09.29 அவசர சிகிச்சை வண்டி - Ambulance. ஒரு உயிரைக் காப்பாற்றப் போராடும் வாகனம். நாளாந்தம் பல உயிர்களைக் காப்பாற்றும் சேவையை வழங்கி வருகிறது. நெரிசல் மிக்க போக்குவரத்து சாலைகளில

பீப்... பீப்.... (Peep... Peep...)

Image
பீப்... பீப்.... (Peep... Peep...) காலை நேரம். போக்குவரத்து நெரிசல் மிக்க பகுதி. சமிக்ஞை விளக்கு பச்சை நிறத்தில் ஒளிர்வதற்கு இன்னும் சில நிமிடங்கள் காத்திருக்க வேண்டும். முன்னால் 50 வாகனங்கள், பின்னால் 100 வாகனங்களாவது இருக்கும். இடைநடுவில் ஒரு பேரூந்து. அதில் உள்ள பயணிகளுள் ஒருவர். பின்னாலுள்ள வாகனங்கள் எழுப்பும் பீப் ஒலி (Horn) செவிப்பறையை கிழித்துக் கொண்டு கேட்கிறது. அந்தப் பேரூந்திலுள்ள பயணியின் மனநிலை என்னவாக இருக்கும்? அந்த இடத்தில் நீங்கள் இருந்தால் உங்கள் மனநிலை என்னவாக இருக்கும்? பண வசதி இல்லாதவர்கள் பணியிடங்களுக்கோ அல்லது வேறு தேவைகளுக்கோ நடந்து அல்லது பொதுப் போக்குவரத்து சாதனத்தின் மூலம்  செல்கிறார்கள். வசதி / இயலுமை உள்ளவர்கள் சொந்த வாகனங்களில் பயணிக்கிறார்கள். நீங்கள் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு நடந்து செல்வதற்கு 30 நிமிடங்கள் ஆகின்றது என வைத்துக் கொள்வோம். அந்த இடத்தை சொந்த வாகனத்தின் மூலம் 15 நிமிடங்களில் அடைந்து விடலாம் எனக் கொள்வோம். நீங்கள் வாகனத்தில் செல்லும் ஒருவராக இருந்தால் நடந்து செல்லும் ஒருவரை விடவும் 15 நிமிடங்கள் முன்னதாகவே விரைவாக அந்த இடத்தைச் ச

சிகரம் பாரதி 4/50

வணக்கம் வலைத்தள வாசக நண்பர்களே! 2016.09.25 [1] இன்று எனது உடன் பிறந்த சகோதரன் ஜனார்த்தனன் க்கு பிறந்த நாள். மனம் நிறைந்த வாழ்த்துக்கள் சகோதரா. நேற்று இரவு நமது தொடர் பதிவின் மூன்றாம் பதிவை பதிப்பித்துவிட்டு தூங்கும் போது மணி அதிகாலை ஒன்று! இந்த 4 வது தொடர் பதிவோடு இந்த வருடத்தில் நான் எழுதிய மொத்த பதிவுகளின் எண்ணிக்கை 14 ஆகிறது. இது நான் இந்த வலைப்பதிவை ஆரம்பித்து 5 வருடங்களில் மூன்றாவது  அதிக எண்ணிக்கையிலான பதிவுகளின் எண்ணிக்கையைச் சமப்படுத்துகிறது. இரண்டாவது அதிக எண்ணிக்கை 15 ஆகும். ஆனாலும் எழுத்துக்களின் அல்லது எழுதுபவரின் தரத்தை இந்த எண்ணிக்கைகள் தீர்மானிப்பதில்லை என்பதே நிஜம்! [2] 'தொடரி' மற்றும் 'ஆண்டவன் கட்டளை' ஆகிய தமிழ்த் திரைப்படங்கள் இவ்வாரம் வெளியாகி இருந்தன. இரு திரைப்படங்களுமே மக்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தன. விஜய் சேதுபதியின் ஒவ்வொரு திரைப்படமும் வித்தியாசமாக இருக்கும். இன்றைய முன்னணி நடிகர்களாக இருக்கும் விஜய், அஜித் மற்றும் ரஜினி போன்றவர்களை விட விஜய் சேதுபதியின் நடிப்பு மிகப் பிரமாதமானது. தனக்கான கதையை மிகக் கச்சிதமாக இவர் தேர்வ

சிகரம் பாரதி 3/50

Image
வணக்கம் வலைத்தள வாசகர்களே! 2016.09.22 ' கூகிள் அல்லோ' (Google Allo )  உலகம் முழுவதும் கூகிளினால் வெளியிடப்பட்டது.  வாட்ஸப்  ,  வைபர்  மற்றும்  இமோ  போல இது கூகிளின் இணைய அரட்டை செயலி. குரல் மற்றும் வீடியோ அழைப்புகளை இந்த செயலியில் மேற்கொள்ள முடியாது. வீடியோ அழைப்புகளுக்காக சில வாரங்களுக்கு முன்னால் கூகிள் ' கூகிள் டுவோ ' (Google Duo )  என்னும் செயலியை அறிமுகம் செய்திருந்தது. இதில் வீடியோ அழைப்புகளை தவிர வேறு எதுவும் இல்லை. ' கூகிள் டுவோ ' மற்றும் ' கூகிள் அல்லோ ' ஆகிய இரண்டு செயலிகளுக்காகவும் நான் முன்பதிவு செய்திருந்தேன். 2016.09.23 ' கூகிள் அல்லோ ' - இன்று உலகை அல்லோலகல்லோலப்படுத்திக் கொண்டிருக்கும் கூகிளின் புத்தம்புதிய இணைய அரட்டை செயலி! ஏற்கனவே  வாட்ஸப் ,  வைபர் ,  பேஸ்புக் மெசெஞ்சர்  மற்றும்  இமோ  என ஆயிரக்கணக்கில் செயலிகள் நம்மை ஆக்கிரமித்திருக்கும் நிலையில் புதுவரவு இது. எனக்கு இன்று (2016.09.23) 'அல்லோ' செயலியை தரவிறக்கம் செய்யும் அனுமதி கிடைத்தது. காலை வேளையிலேயே தரவிறக்கம் செய்து பயன்படுத்தினேன். இன்று காலை 

சிகரம்பாரதி 2/50

                   வணக்கம் வலைத்தள வாசகர்களே! இன்றும் பல்வேறு விடயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள இங்கு வந்துள்ளேன். 2016.09.20 இன்று இலங்கையின் முன்னணி கையடக்கத் தொலைபேசி நிறுவனங்களில் ஒன்றான "டயலொக்" தலைமையகத்திற்கு சென்றேன். நான் கடந்த சில வருடங்களாக எனது முதன்மை கையடக்கத் தொலைபேசி வலையமைப்பாக 'டயலொக்' இனையே பயன்படுத்தி வருகிறேன். இணையப் பயன்பாட்டிற்கும் 'டயலொக்' தான். நான் பாவித்து வந்த 2G / 3G சிம் அட்டையை 4G சிம் அட்டையாக மாற்றிக் கொள்ளவே இந்த விஜயம். இலவசமாக மாற்றிக் கொடுத்தார்கள். இணையத் தரவுப் பொதிகள் ஏலவே பயன்படுத்தியவை தான். இணைய இணைப்பின் வேகம் அதிகரிக்கும் என்பது மட்டுமே மாற்றமாக அமையும். ரிலையன்ஸ் ஜியோ போன்று 4G புரட்சியெல்லாம் நடக்கவில்லை.  மேலும் வீட்டுக்கான 4G இணைய கருவியை (4G Home Broadband Device) இம்மாத இறுதியில் வாங்கவுள்ளேன். இது நிலையான இணைப்பாகும். மின் இணைப்பிற்கு இணைத்தே பயன்படுத்த வேண்டும். கையடக்கத் தொலைபேசி போல செல்லுமிடமெல்லாம் எடுத்துச் செல்ல முடியாது. ஆனால் குறிப்பிட்ட எல்லைக்குள் ஒரே நேரத்தில் 10 வரையிலான சாதனங்களை இ

சிகரம்பாரதி 1/50

                    வணக்கம் வாசகர்களே! நலம், நலமறிய ஆவல். என்னைச் சுற்றி நடைபெறும் நிகழ்வுகளின் தொடர் பதிவே இது. இதன் 50 வது அத்தியாயம் 2016,டிசம்பர் 31 இல் வெளியாகும். போகலாமா? இன்று - 2016.09.19 "ரஜினி" என்றாலே எல்லோருக்கும் பிடித்த ஒரு நடிகர். வில்லனாக அறிமுகமாகி இன்று நட்சத்திரமாக மிளிர்கிறார். அண்மையில் வெளியான 'கபாலி' ரசிகர்களிடம் ஓரளவு வெற்றி பெற்றது. இன்று ரஜினியின் ஐந்து படங்கள் கொண்ட இறுவட்டுத் தொகுப்பு ஒன்று என்கரம் கிட்டியுள்ளது. அதில் கபாலி, எஜமான், மன்னன், பாண்டியன் மற்றும் அண்ணாமலை ஆகிய திரைப்படங்கள் காணப்படுகின்றன. அதில் இன்று நான் பார்க்கப்போவது 'அண்ணாமலை'.  ரஜினியின் இடைக்காலப் படங்கள் ஒரு விறுவிறுப்பைக் கொண்டிருக்கும். அவரது அசத்தலான நடிப்புப் பாணி எல்லோரையும் கவர்ந்திழுக்கும். பாடல்களும் அருமையாக இருக்கும். ரஜினியின் பல்வேறு படங்கள் அரசியல் பேசினாலும் ரஜினி இன்று வரை அரசியல் பேசியதில்லை. ரஜினி குறித்து நேர்மறை மற்றும் எதிர்மறையான கருத்துக்களும் இருந்தாலும் அவரது வளர்ச்சி எல்லோராலும் பாராட்டப்படும் ஒன்றாகவே காணப்படுகின்றது.