Posts

Showing posts from October, 2016

சிகரம் பாரதி 24 / 50

Image
வணக்கம் வலைத்தள வாசகர்களே! இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்! தீபாவளித் திருநாளான சனிக்கிழமையும் தொடர்ந்த ஞாயிறுமாக இரண்டு விடுமுறை நாட்களுக்குப் பின் ஒரு வேலை நாளை நிறைவு செய்து விட்டு வந்திருக்கிறேன். நாளை முதலாம் திகதி. எனது வேலைத் தளத்தில் மாதாந்த இருப்புக் கணக்கெடுப்பு நாள். காலை முதல் மதியம் வரை நீளும் கணக்கெடுப்புச் செயற்பாடு தலைவலியை வரவழைத்துவிடும். காலையும் மாலையும் போக்குவரத்து நெரிசல் வேறு தன் பங்கிற்கு தலைவலியை இன்னமும் அதிகப்படுத்தும். தினசரி வேலை, பின்பு வீடு என்று ஒரே சுழற்சியில் இயங்கிக் கொண்டிருப்பது மனதளவில் சலிப்பை ஏற்படுத்துகிறது. ஐந்து வருடங்கள் கடந்து ஆறாவது வருடமாக ஒரே வேலையில் நிலைத்திருக்கிறேன். தற்போதைய வருமானத்திற்கு குடும்பச் செலவுகள் பழக்கப்பட்டுவிட்டதால் வேறு வேலையும் தேட முடியாத நிலை. கல்வியும் இடை நடுவில். க.பொ.த உயர்தரம் ( தரம் 13 ) வரை கல்வி கற்றேன். உயர்தரத்தில் 3 பாடங்களிலும் சித்தி. இலங்கை ரஜரட்ட பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்திற்கும் தெரிவானேன். அனுமதிக்கான சகல செயற்பாடுகளையும் நிறைவு செய்துவிட்டு அழைப்புக்காகக் காத்திருந்தேன். அந்த சந்தர்ப்

இணையத்தளம் உருவாக்க உதவி தேவை! - சிகரம் பாரதி 23 / 50

வணக்கம் வலைத்தள வாசகர்களே! இது எனது 175 ஆவது பதிவு. நான் முன்னரே குறிப்பிட்டது போல எண்ணிக்கைகள் சாதனைகள் அல்ல. நிற்க, இந்தத் தீபாவளித் திருநாளை அனைவரும் இனிதாக கொண்டாடினீர்களா? மகிழ்ச்சி. நான் விசேடமாகக் கொண்டாடவில்லை என்றாலும் சாதாரணமாகக் கொண்டாடினேன். வெளியில் எங்கும் செல்லவில்லை. வீட்டுக்குள்ளேயே தீபாவளியை முடித்தாகிவிட்டது. ம்ம்.... அடுத்து? அடுத்தென்ன? வழமை போல் அடுத்த வேலையைப் பார்க்கப் போக வேண்டியது தான்.  எனக்கான இணையத்தளம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்னும் முயற்சியில் இறங்கியுள்ளேன் என உங்களிடம் கூறினேன் அல்லவா? ஆனால் உதவி செய்வாரின்றி தவித்துக் கொண்டிருக்கிறேன். இணையத்தள முகவரியைத் தீர்மானித்து விட்டேன். ஆனால் தளத்தை எப்படி வடிவமைப்பது , எவ்வாறு பராமரிப்பது என்பதெல்லாம் தெரியாமல் விழி பிதுங்கிப் போயிருக்கிறேன். 2017 ஜனவரி 01 அன்று துவங்குவதற்கு ஏதுவாக முன்னேற்பாடுகளை செய்துவிட வேண்டும் என்று எண்ணியுள்ளேன். ஆனால் யாரிடம் கேட்பது? எவ்வாறு நிறைவேற்றுவது? தெரியவில்லையே! ஸ்ஸ்ஸப்பா..... இப்பவே கண்ணைக் கட்டுதே.......

சிகரம் பாரதி 22 / 50 - தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

Image
வணக்கம் வலைத்தள வாசகர்களே! உங்கள் அனைவருக்கும் மனம் கனிந்த இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் உரித்தாகட்டும். இந்த இனிய நன்னாளில் கவலைகளை மறந்து பகைமையைக் கைவிட்டு உறவுகளுடன் இனிதே பண்டிகையைக் கொண்டாடி மகிழுங்கள். எல்லா நாளும் போல இதுவும் ஒரு நாளே. ஆயினும் இந்த நன்னாளில் இருந்து உங்கள் வாழ்க்கையில் புதிய வெளிச்சம் ஒளி வீச வாழ்த்துகிறேன். இனிப்புகளை மட்டுமல்லாது இனிய வார்த்தைகளையும் உறவுகளுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்களிடம் இருந்து தொடங்கும் மகிழ்ச்சி உலகெலாம் பரவட்டும். உங்கள் புன்னகையால் அனைவரையும் அரவணைத்திடுங்கள். இந்தத் தீபாவளித் திருநாள் உங்கள் வாழ்க்கையின் மற்றுமோர் மகிழ்ச்சியான தருணங்களை உருவாக்கும் நன்னாளாக அமையட்டும்.  தொலைக்காட்சிகளையும் பேஸ்புக் , டுவிட்டர் போன்ற சமூகக் குப்பைகளையும் வாட்ஸப் , வைபர் போன்ற தொல்லைகளையும் கைவிட்டு முழு மனதுடன் தீபாவளித் திருநாளைக் கொண்டாடிடுங்கள். அப்போது தான் அது உண்மையான பண்டிகையாக அமையும். சமூக வலைத்தளங்கள் என்னும் இணையக் குப்பைகளால் தான் நாம் இயந்திரத் தனமாக நமது பண்டிகைகளை கடமைக்காகக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். இன்றைய நாளில் உறவு

சிகரம் பாரதி 21 / 50 ( சிங்களவர்கள் களவெடுத்த இந்து தெய்வங்கள்! )

வணக்கம் வலைத்தள வாசகர்களே! சிங்களவர்கள் களவெடுத்த இந்து தெய்வங்கள்! பௌத்த மதம் புத்தரை அடிப்படையாகக் கொண்டது. ஆனால் இலங்கையில் பௌத்தர்கள் அல்லது சிங்களவர்கள் இந்து தெய்வங்களையும் வழிபாட்டுத் தலங்களையும் தமதாக்கும் முயற்சியிலீடுபட்டு வருகின்றனர். முருகன் அருள்பாலித்த கதிர்காம ஆலயத்தில் சிங்கள ஆட்சியே நடக்கிறது. சிவனொளி பாத மலை புத்தர் மலையாகிவிட்டது. விஷ்ணு கடவுளின் சிலையை விகாரைகளில் பிரதிஷ்டை செய்து வழிபட்டு வருகின்றனர். காளியை தரிசிக்க கூட்டம் அலைமோதுகிறது. இவ்வாறாக படிப்படியாக இந்து தெய்வங்களை பௌத்த மதத்திற்குள் உள்வாங்க சிங்களவர்கள் முயற்சித்து வருகின்றனர். இலங்கைவாழ் இந்துசமய மக்கள் அனைவரும் இது தொடர்பில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது அவசியமாகும். மேலும் கிண்ணியா ஏழு கிணறு நீரூற்றை புனரமைப்பு என்ற பெயரில் அழிக்கும் முயற்சிகளை பேரினவாத அரசு முன்னெடுத்து வருகிறது. இது தொடர்பில் பேஸ்புக்கில் வெளியான பதிவு ஒன்று உங்கள் பார்வைக்கு இதோ: கிண்ணியா பறிபோய் விட்டது! காரணம் என்ன? கிண்ணியா  பறிபோய்விட்டது என்ற செய்தி தொலைக்காட்சிகளிலும் வானொலிகளிலும் வெளிவந்த போது இலங்கை

சிகரம் பாரதி 20 / 50

வணக்கம் வலைத்தள வாசகர்களே! 2016.10.25 * நான் இப்போதெல்லாம் நிறைய எழுதுகிறேன். மனதில் புதுப்புது எண்ணங்கள் பிறக்கின்றன. வலைத்தளத்துக்காக அதிகளவு நேரம் செலவிடுகிறேன். காரணம் தொலைக்காட்சி பார்க்கும் நேரத்தைக் குறைத்தது தான். பார்க்கவே மாட்டேன் என்றில்லை. முடியுமானவரை குறைத்துவிட்டேன். ஆகவே எனக்காக அதிக நேரம் ஒதுக்கிக் கொள்ள முடிந்திருக்கிறது. நண்பர் வெற்றிவேல் எழுதிய 'வானவல்லி' புதினத்தை வாசித்துக் கொண்டிருக்கிறேன். விரைவில் வாசித்து முடித்திட வேண்டும். அருமையான படைப்பு. * நான் 2017 இல் சொந்த இணையத்தளத்துடன் அடியெடுத்து வைக்க வேண்டும் என எண்ணுகிறேன். ஆனால் எப்படி நிறைவேற்றுவது என்று தான் தெரியவில்லை. நண்பர்கள் யாரேனும் உதவினால் நலம். 2016.10.26 * ஆப்பிள் நிறுவனம் அண்மையில் ஆப்பிள் 7 மற்றும் 7 பிளஸ் ஆகியவற்றை வெளியிட்டது. கூகிள் நிறுவனம் இதற்குப் போட்டியாக தனது முழுக் கட்டுப்பாட்டிலான கூகிள் பிக்ஸல்  மற்றும் பிக்ஸல் எக்ஸ் எல் ஆகியவற்றை வெளியிட்டது. மேலும் கூகிள் இந்தியாவில் WIFI சேவையை குறைந்த கட்டணத்தில் வழங்கும் திட்டத்தை முன்னெடுத்துள்ளது. போகிற போக்கில் ஆப

விறல்வேல் வீரனுக்கோர் மடல் - பதில் கடிதம் - 02

பேரன்புள்ள நண்பனுக்கு, வணக்கம் நண்பா! உனது இல்வாழ்க்கை நன்றாக சென்றுகொண்டிருக்கிறது என்பதை தங்கையுடன் பேசியபோதே கண்டறிந்துவிட்டேன். அதன் பயனாகத்தான் நீ இப்பொழுது வாழ்வின் அடுத்த கட்டத்தில் அடியெடுத்து வைத்திருக்கிறாய். முதலில் உனக்கு நான் எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறன். நீ தந்தையாகி வாழ்வு நிறைவடையப் போவதை அறிந்து அகம் மகிழ்ந்தேன். மீண்டும் வாழ்த்துக்கள். நீ கேள்விப் பட்டிருப்பாய். வயிற்றில் இருக்கும் குழந்தையின் செவிப்புலன்கள் இருபது வாரத்திற்குள் முழுவதுமாக வளர்ச்சி அடைந்து விடும் என்று. ஐந்து மாதம் கழித்து குழந்தையால் நாம் பேசுவதை நன்றாக கேட்க இயலும். இப்போதிலிருந்தே குழந்தைக்கு என்னென்ன புத்தகங்கள் வாசிக்கலாம், என்னென்ன கதைகளைக் கூறலாம் என்று சேகரித்து வைத்துக் கொள். இன்றைய குழந்தை பிறந்த அடுத்த தினமே ஸ்மார்ட் போனையும், டீ.வி ரிமோட்டையும் கொடுத்து விடுகிறார்கள். குழந்தை அதன் போக்கிற்கு போகோ சேனலைத் தேடிக் கொண்டிருக்கிறது. அந்தத் தவறை நீ செய்யாதே. தினமும் குழந்தையுடன் பேசு. கதைகளைக் கூறு. புத்தகங்களைப் படி. நிறைய புது இடத்திற்கு அழைத்துச் செல். புது உலக

சிகரம் பாரதி 19 / 50 ( ரெமோ எதிர் டூட்ஸி )

Image
வணக்கம் வலைத்தள வாசகர்களே!  2016.10.24 * 'ரெமோ' சிவகார்த்திகேயன் - கீர்த்திசுரேஷ் நடிப்பில் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் வெளிவந்துள்ள திரைப்படம். இறுவட்டில் பார்த்தேன். திரையரங்கில் திரைப்படத்தைப் பார்க்கப் போனால் சில ஆயிரங்கள் கரைந்து போகிற காரணத்தால் ஏழைகளுக்கு இறுவட்டே துணை. சரி, நமது பார்வைக்கு வருவோம். இத்திரைப்படம் Tootsie என்னும் ஆங்கிலத் திரைப்படத்தின் பிரதி என்பது குறிப்பிடத்தக்கது. கதாநாயகன் கதாநாயகியைக் காதலிக்கிறார். அதற்காக அவர் மேற்கொள்ளும் தில்லு முல்லுகளே ரெமோ. சாமானிய ரசிகனை திருப்திகொள்ள வைத்துவிடுகிறது. சற்றே திரைப்பட நுணுக்கங்கள் தெரிந்தவர்களை கழுத்தை நெரிக்கிறது. சதீஷின் நகைச்சுவை கைகொடுக்கவில்லை. சிவாவுக்கு பராட்டா சூரி தான் பொருத்தம். கே.எஸ்.ரவிக்குமார் எல்லாம் எதற்கு இந்தப்படத்தில்? இயக்குனர் வேடத்திலும் வேறு யாரையேனும் போட்டிருக்கலாமே? ஆங்கில மூலத்தைப் பார்க்க வேண்டும். என்னைப் பொறுத்தவரை முன்னைய சிவகார்த்திகேயனின் படங்கள் அளவுக்கு ரெமோ ஈர்க்கவில்லை.  Tootsie - டூட்ஸி. மொழி புரியாவிட்டாலும் படம் பிடித்திருக்கிறது. நான்கு பாட்டு , இரண்டு

சிகரம் பாரதி 18 /50

Image
வணக்கம் வலைத்தள வாசகர்களே! இப்பதிவுடன் நமது 'சிகரம்' வலைத்தளம் 44,000 பக்கப் பார்வைகளைக் கடந்துள்ளது. அது மட்டுமில்லை, நீண்ட நாட்களாக எழுதாமல் இருந்ததால் 700 க்கு மேல் பின்தங்கிப் போயிருந்த தமிழ்மணம் தரவரிசை 186 க்கு முன்னேறியுள்ளது. 100க்குள் ஒரு வருடமேனும் வந்துவிட வேண்டும் என்பதே என் இலக்கு. 2016.10.22 * கோ-இல் தலைவன் வாழும் இல்லம் என்பதே கோயில் என்று மருவியுள்ளது. தமிழகத்தில் அழியும் நிலையில் உள்ள கோயில்களைப் பற்றி நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் இன்று இரவு 7.30 க்கு உளவுப் பார்வையில் விவரித்தார்கள். நல்ல தேடல். தமிழர்களின் பழங்கால வரலாற்றுக்கு ஒரே ஆதாரமாய் இருப்பது இந்தக் கோயில்கள் தான். இவையும் அழிந்துவிட்டால் கதைகளில் மட்டுமே நம் வரலாறு இருக்கும். தமிழர்களே விழித்தெழுங்கள்! 2016.10.23 * ஆனந்த விகடன் இதழ் 90 ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது. வாழ்த்துக்கள் விகடன். தமிழுக்குப் பெரும் பங்காற்றியிருக்கிறது விகடன். விகடன் உருவாக்கி விட்டவர்கள் பல நூறு பேர்! ஆனால் இப்போது தமிழின் சாபக் கேடாக உருவெடுத்துள்ளது விகடன். தமிழுக்குச் சேவை செய்தது போதும் என்று பணத்திற்குச் ச

தமிழ் வரலாற்றுப் புதினங்கள் - கால வரிசை

வணக்கம் வலைத்தள வாசகர்களே! தமிழில் இதுவரை பல்வேறு வரலாற்றுப் புதினங்கள் வெளிவந்திருக்கின்றன. அவற்றை இப்பதிவு அக்கதை நிகழும் கால அடிப்படையில் வரிசைப்படுத்துகிறது. உங்கள் பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன. 1895 முதல் வரலாற்றுப் புதினங்கள் எழுதப்பட்டு வருகின்றன. சுமார் 130 வருடகாலமாக வெளியிடப்பட்ட புதினங்களை கதைக்களத்தின் கால வரிசையில் வகைப்படுத்துவதே இப்பதிவாகும். வாசகர்களாகிய உங்கள் ஒத்துழைப்பு இத்தொகுப்பை மேலும் பயனுடையதாக ஆக்கும் என்பதில் ஐயமில்லை. மேலும் இந்தத் தொகுப்புக்காக தகவல்களைத் தேடிய போது ஒரே கதை ஒவ்வொருவராலும் வெவ்வேறு காலகட்டங்களில் நிகழ்வதாக எழுதப்பட்டுள்ளதை காண முடிகிறது. ஆகவே முதலில் தமிழர்களின் சரித்திரத்தை யாரேனும் காலங்களினால் வகைப்படுத்த வேண்டும். இல்லையேல் எதிர்காலத்தில் தமிழர்களின் வரலாற்றுக்கு ஆதாரமாக விளங்கக்கூடிய வரலாற்றுப் புதினங்கள் மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்திவிடும். இப்போது தொகுப்பு உங்களுக்காக இங்கே: கி.மு 200 ( வானவல்லியை அடிப்படையாகக் கொண்டு காலம் கணிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் காலத்தை குறிப்பிடவில்லை) கரிகால் வளவன் -  சோழர்களின் வரலாறு  - கி

சிகரம் பாரதி 17/50 - டுவிட்டர் @newsigaram - 09

Image
வணக்கம் வலைத்தள வாசகர்களே! இன்று உங்களுக்காக டுவிட்டரில் நான் வாசித்து ரசித்த பதிவுகளின் தொகுப்பு இங்கே: #  இந்திய கபடிவீரரின் மனைவி தற்கொலைனு தினத்தந்தி விளையாட்டு செய்திகள் பக்கத்துல போட்ருக்கான்... ஏன்டா! இதெல்லாம் உங்களுக்கு விளையாட்டாடா? #  கொடிது கொடிது வறுமை கொடிது, அதனினும் கொடிது மாசக் கடைசியில் வறுமை.!! # சாவு வீட்டில் பசிக்கும் வயிற்றைப் போல் யதார்த்தத்தை உணர்த்துவது வேறெதுவுமில்லை! # 730 ! #மலையகம் 1000க்கு இன்னும் காலம் இருக்காம் :( #SriLanka உழைப்பின் வியர்வையும், துயரத்தின் கண்ணீரும் போராட்டத்தின் குருதியும் வீண் ! # நாம் செய்த தவறுகளை எச்சில் தொட்டு சிலேட்டில் அழித்தவரை வாழ்க்கையில் எந்த பிரச்சனையுமில்லை!!! # எவ்வளவு அடக்கியும் வெளிவந்த கண்ணீரை தூசி விழுந்து விட்டதாய் பாவனை செய்தேன்.. எவரும் நம்பியிருக்கமாட்டார்கள் என்பதுதான் இப்போது உறுத்துகிறது! # கண்ணதாசன் இறந்ததற்கு காரணம் மதுவருந்தியது, இதை அறிந்து மது வருந்தியது - வாலி

சிகரம் பாரதி 16/50 - வந்தாச்சு கூகிள் பிக்ஸெல் !

Image
வணக்கம் வலைத்தள வாசகர்களே! இன்று கூகிள் தனது முதலாவது சொந்தக் கைப்பேசியை வெளியிட்டிருக்கிறது. கூகிள் இணையத் தேடலுக்காக உருவாக்கப் பட்டாலும் பின்னர் பல்வேறு சேவைகளை தன்னோடு இணைத்துக் கொண்டது. அதில் ஆண்ட்ராய்டு இயங்குதளம் மிக முக்கியமானது. கையடக்கத் தொலைபேசிப் பாவனையில் முக்கியமான மாற்றத்தை இது உருவாக்கியது. ஆனால் கூகிள் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் 6.0 பதிப்பு வரை இயங்குதளத்தை மட்டுமே கூகிள் வழங்கி வந்தது. கையடக்கத் தொலைபேசிகள் வெவ்வேறு நிறுவனங்களால் உருவாக்கப்பட்டு வந்தன.அண்மையில் கூகிள் நோகட் 7.0 ( Google Android Nougat 7.0 ) வெளியிடப்பட்டது. இந்த இயங்குதளத்துடன் தனது முழுமையான கட்டுப்பாட்டிலான கைப்பேசியை கூகிள் அறிமுகம் செய்கிறது.  HTC நிறுவனத்தின் மூலம் ஒப்பந்த அடிப்படையில்  கூகிள் பிக்ஸெல் என்னும் கைப்பேசியை கூகிள் நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. ஆப்பிள் ஐ போனுக்கு இணையாக இக்கைப்பேசி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அண்மையில் வெளியான கூகிள் அல்லோ , டுவோ மற்றும் கூகிள் அசிஸ்டெண்ட் ஆகியவை கைப்பேசியுடன் இணைக்கப்பட்டுள்ளன. வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான அனுபவத்தை  கூகிள் ப

சிகரம் பாரதி 15/50 ( நமது கிரீடங்கள் )

Image
01. வாசிப்பு -  இன்னுமொரு வாழ்க்கை - இன்னுமொரு உலகம் -  இன்னுமொரு பிறப்பு . நமது வாழ்க்கைக்கு சுடரேற்றும் ஒளி முதல். அறிவின் ஊற்றை சுரக்க வைக்கும் அற்புத மந்திரம். ஒவ்வொரு எழுத்திலும் சொல்லிலும் நிதமும் புதுப்புது அனுபவங்களை அள்ளி வழங்குகிறது. வாருங்கள்! வாசிப்பால் ஒன்றிணைவோம்! 02. நம்மால் முடியுமா என்ற சந்தேகத்துடனேயே வலைப்பதிவில் காலடி எடுத்து வைத்தேன். ஆனால் உங்கள் பேராதரவு என்னை நம்பிக்கையுடன் தொடர வைத்திருக்கிறது. தங்கள் வருகை மட்டுமல்ல, கருத்துக்களும் தான் என்னை வளப்படுத்தும் என்பதால் தங்கள் மேலான கருத்துரைகளையும் வழங்கி உதவ வேண்டுகிறேன். 03.  உங்கள் மனதுக்கு விரோதமின்றி செய்யப்படும் எந்தவொரு செயலுமே சரியானதுதான். 04.  என் வாழ்வில் நிஜங்களை விட கனவுகள் தான் அதிகம். இப்போதும் கனவுகளின் கைக்குழந்தையாகவே உள்ள நான் எப்போதாவது சாதனைகளின் மூத்த பிள்ளையாய் வளர்வேன் என்ற நம்பிக்கையில் தான் இன்னமும் வாழ்ந்துகொண்டிருக்கிறேன். அந்த நாள் வெகு தூரத்தில் இல்லை நண்பர்களே. வாருங்கள். வாசிப்பால் ஒன்றிணைவோம்.

சிகரம் பாரதி 14/50 (குழந்தை - கவிதை)

நான் உன் குழந்தை எனக்கு நீ குழந்தை நமக்கு ஒரு குழந்தை வேண்டும் அல்லவா? கணவனே, சொல் கணவனே சொல்! இது என் மனைவி எனக்கு எழுதிய கவிதை. மனைவி தாய்மையடைந்திருக்கிறார். ஆதலால் நான் இப்போது குழந்தை வேண்டாம் என்று சொல்லக்கூடாது என்பதற்காக அவர் எழுதிய வரிகள் இவை. படித்தவர்கள் மட்டும் தான் கவிதை எழுத வேண்டுமா என்ன? மனம் படைத்தவர்களும் எழுதலாம் அல்லவா?

சிகரம் பாரதி 13/50 (கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்து!)

2016.10.18 மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை தீர்மானிக்கும் கூட்டு ஒப்பந்தம் இன்று கைச்சாத்தானது. குறித்த ஒப்பந்தத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் மற்றும் கூட்டு தொழிலாளர் சங்கம் ஆகிய தோட்ட தொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் முதலாளிமார் சம்மேளனத்தின் பிரதிநிதிகள் ஆகியோர் இன்று இவ்வொப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இதேவேளை, இந்த ஒப்பந்தத்தின் படி, தோட்டத் தொழிலாளர்களுக்கு வருடத்திற்கு 300 நாட்கள் வேலை வழங்கவும், தொழிலில் ஈடுபட்டிருக்கும் போது குளவித் தாக்குதலுக்கு இலக்கானால் மீள பணிக்கு வரும் வரை அவர்களுக்கான வேதனத்தை வழங்கவும் இணக்கம் காணப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இக்கூட்டு ஒப்பந்தத்தின் படி அடிப்படைச் சம்பளம் ரூ 500 ஆகும். மேலும் வரவுக் கொடுப்பனவு ரூ 60, விலை பகிர்வுக்கான கொடுப்பனவு ரூ 30 , உற்பத்தியை அதிகரிப்பதற்கான கொடுப்பனவு ரூ 140 என மொத்தம் 730 ரூபாவாக அமைகிறது. முன்னைய சம்பளமாக ரூ 620 இல் இருந்து ரூ 110 மட்டுமே அதிகரிக்கப்பட்டுள்ளது. எனினும் தமக்கு 1000 ரூபாவே வேண்டும் எனக்கோரி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்து

சிகரம் பாரதி 12/50

வணக்கம் வலைத்தள வாசகர்களே! 2016.10.16 கிரிக்கெட். எனக்கு மிகவும் பிடித்தமான விளையாட்டு. நான் இலங்கையராக இருந்த போதிலும் எனக்கு இந்திய அணியைத்தான் பிடிக்கும். ஏன் இந்திய அணியைப் பிடித்துப் போனது என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் பிடிக்கும். நான் விளையாட்டை விளையாட்டாகவே பார்க்கிறேன். கிரிக்கெட் ஒரு விளையாட்டு. அதில் எனக்கு இந்திய அணியைப் பிடிக்கும். அவ்வளவுதான். ஆனால் ஒரு சிலர் இலங்கையில் பிறந்துவிட்டு அந்நிய மண்ணை ஆதரிக்கிறேன் என்று குறை கூறுவார்கள். அவர்களுக்கெல்லாம் ஒன்றைச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். நான் பிறப்பால் இலங்கையன். இலங்கை நாட்டையும் தாய் பூமியான மலையகத்தையும் நேசிக்கிறேன். தனி ஈழத்தையோ அல்லது இந்தியாவையோ நான் நேசிக்கவில்லை. அல்லது வேறு நாடுகளை ஆதரிக்கவில்லை.  இலங்கையில் தமிழர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. மலையகத் தமிழர்கள் 200 ஆண்டுகள் கடந்தும் அடிமை வாழ்வு வாழ்கிறார்கள். இப்படியாக இலங்கை நாட்டுடன் நான் முரண்படக் கூடிய விடயங்கள் ஆயிரம் இருந்தாலும் ஒன்றிணைந்த இலங்கை தேசத்தையே நான் நேசிக்கிறேன். ஆனாலும் கிரிக்கெட் விளையாட்டில் இந்திய அணியையே விரும்புகிற

கல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 10

Image
பகுதி - 01 கல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 01 பகுதி - 02 கல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 02   பகுதி - 03 கல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 03   பகுதி - 04 கல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 04   பகுதி - 05 கல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 05 பகுதி - 06 கல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 06   பகுதி - 07 கல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 07 பகுதி - 08   கல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 08 பகுதி - 09   கல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 09/01   கல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 09/02 பகுதி - 10 அன்று மாலை. கடுமையாகப் பெய்து சற்றே ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் மழையும் ஓரளவு பனியும் மக்களை ஐந்து மணிக்கெல்லாம் வீடுகளுக்குள் முடங்கச் செய்திருந்தன. என் இல்லம் தேடி வந்திருந்த நண்பர்களுடன் பாடசாலை செல்லும் பாதையில் நடந்து கொண்டிருந்தேன். பாடசாலையை நெருங்கியபோது எனக்கு திக்கென்றது. திவ்யா பாடசாலைச் சீருடையில் தனது தோழிகள் புடை சூழ மரத்தடியில் நின்றிருந்தாள். நாங்கள் எங்கள் நடையை மரத்தடியிலிருந்து சற்று தூரத்திலேயே நிறுத்திக் கொண்டோம்.  ந

சிகரம் பாரதி 11/50

Image
வணக்கம் வலைத்தள வாசகர்களே!   2016.10.13 வர வர இந்த திரைப்பட விமர்சகர்களின் தொல்லை தாங்க முடியவில்லை. திரைப்படம் வெளிவந்து அரை மணி நேரத்தில் செம மொக்கை என்கிறார்கள், ஆகா ஓகோ என்கிறார்கள். இந்த அலப்பறைகளை நம்மவர்கள் பேஸ்புக்கில் பார்த்துவிட்டுத்தான் படத்தை பார்ப்பதா இல்லையா என்று முடிவு செய்கிறார்கள். இந்த அநியாயத்தைக் கேட்க ஆளில்லையா என்றுதான் கேட்கத் தோன்றுகிறது. முழுக்கதையையும் சொல்லி விட்டு மீதியை திரையில் பாருங்கள் என்கிறார்கள். இந்த மாதிரியான விமர்சனங்களால் ரசிகர்களின் ரசனை பாதிக்கப்படுகிறது. திரையரங்கில் படத்தின் ஒவ்வொரு காட்சியைப் பார்க்கும் போதும் இந்த விமர்சனங்கள் நினைவுக்கு வந்து தொலைக்கும். ரசிகன் திரைப்படத்தை தடையின்றி ரசிக்க வேண்டுமானால் திரைப்படங்கள் வெளியாகி 100 நாட்களுக்கு விமர்சனம் வெளியிடத் தடை என்று அறிவித்தால் தான் முடியும் போல! 2016.10.14 'Unstoppable' - ஆங்கிலத் திரைப்படம். 'தொடரி' தமிழ்த் திரைப்படம் இதில் இருந்து தான் உருவானது அல்லது கதை களவாடப்பட்டது. இன்று இந்தத் திரைப்படத்தை இணையத்தில் தரவிறக்கிப் பார்த்தேன். 'தொடரி' என்

சிகரம் பாரதி 10/50

வணக்கம் வலைத்தள வாசகர்களே!  2016.10.10   கே.டிவி யில் இன்று 'சிங்கம்' திரைப்படம். சூர்யாவின் நடிப்பு அருமை. அவருக்கு மட்டுமே இம்மாதிரியான திரைப்படங்கள் பொருந்தும். மிகைப்படுத்தப்பட்ட நடிப்பு தான். நமக்கு முன்னால் நடக்கும் சமூக அநீதிகளைக் கண்டு நம் மனம் பொங்கும். அவ்வேளையில் அதற்குக் காரணமானவர்களை அடித்து நொறுக்க வேண்டும் எனத் தோன்றும். ஆனாலும் நாம் பல்லைக் கடித்துக் கொண்டு பொறுத்துக் கொள்வோம். ஆனால் திரைப்படத்தில் சூர்யா நாம் பொறுத்துப் போகிறவர்களையெல்லாம் போட்டு வெளுத்துவாங்கிக் கொண்டிருக்கிறார். இப்போது நம் மனம் 'சபாஷ்' எனச் சொல்லும். அதனால்தான் இம்மாதிரியான திரைப்படங்கள் வெற்றி பெறுகின்றன என நினைக்கிறேன். 'அஞ்சான்' கூட சூர்யாவின் திரைப்படம் தான். ஆனாலும் 'அஞ்சான்' தோற்றுப்போனது. காரணம் இவ்விரு திரைப்படங்களும் நமக்குள் ஏற்படுத்தும் உணர்ச்சிப் பிரதிபலிப்புகள் வெவ்வேறானவை. 'சிங்கம் 2' கூட இதேமாதிரியானதுதான். 'சிங்கம் 3' கூட விரைவில் வெளிவர போகிறதாம். நம் உணர்ச்சிகளை யாரோ ஒருவர் காசாக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறார். நாம் விழித்து

வலைப்பதிவர் கவீதா காலமானார்!

Image
வணக்கம் வலைத்தள வாசகர்களே! நான் சிகரம்பாரதி. வலைப்பதிவர் , கவிஞர் கவீதா எனது நண்பர் , தோழி. அபாரமான கவிதைத் திறன் கொண்டவர். பாடசாலைக் காலத்திலிருந்தே கவிதை எழுதுவதில் மிகுந்த ஆர்வமுடையவராக இருந்தார். பாடசாலைக் காலத்தின் பின் இலங்கையின் பத்திரிகைகளில் தனது கவிதைப் படைப்புகளை வெளியிட்டு வந்தார். அவரது கவிதை ஆர்வத்தைக் கண்ட நான் அவரது கவிதைகளை உலகறியச் செய்ய எண்ணி ' கவீதாவின் பக்கங்கள் ' என்னும் வலைப்பதிவை உருவாக்கி அவரது கவிதைகளை பிரசுரித்து வந்தேன். அவரிடம் கணினி வசதியில்லாததன் காரணமாக நானே தொடர்ந்து அந்த வலைப்பதிவை நடத்தி வந்தேன். என்றாலும் என்னால் இவ்வலைப்பதிவை சரிவர தொடர்ந்து நடத்திட இயலவில்லை. மேலும் கடந்த சில மாதங்களாக அவருடன் உரையாடும் வாய்ப்பும் எனக்குக் கிட்டவில்லை. இன்று (2016.10.11) பள்ளித் தோழி ஒருவரிடம் நீண்ட நாட்களின் பின் உரையாடிக் கொண்டிருந்த போது 2016.07.05 அன்று தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக அறிந்தேன். அதற்கு 21 நாட்களுக்கு முன்னதாக , அதாவது 2016.06.15 ஆம் திகதியே அவருக்குத் திருமணம் இடம்பெற்றுள்ளது. அவசர கதியில் உறவினர் ஒருவருக்கு மணமுடித்துக்

தமிழாக்கம் - ( தேவை - சிக்கல் - தீர்வு) - 02

Image
வணக்கம் வலைத்தள வாசகர்களே! தமிழாக்கம் - விரிவாகப் பேசப்படவேண்டிய விடயம். அதற்கு முதலில் நீங்கள் நமது முதலாவது பதிவை படித்துவிட்டு வரவேண்டும். இணைப்பு இதோ: தமிழாக்கம் - ( தேவை - சிக்கல் - தீர்வு) - 01 தமிழாக்கம் என்பது என்ன? பிறமொழிச் சொற்களை தமிழ்ப்படுத்துவது. அதாவது பிறமொழிச் சொற்களுக்கான சரியான தமிழ்ப் பதத்தைக் கண்டறிவதாகும். எதையெதை மொழிபெயர்க்கலாம்? பெயர்ச்சொற்கள் தவிர்ந்த அனைத்தையும் மொழிபெயர்க்கலாம். ஏன் பெயர்ச்சொற்களை மொழிபெயர்க்கக் கூடாது? பெயர்ச்சொற்கள் குறிப்பிட்ட ஒருவரை அல்லது குறித்த ஒரு பொருளை விளிப்பதற்கு பயன்படுவது. பெயர்ச்சொற்களை மொழிபெயர்த்தால் சொல்லின் மூலம் சிதைந்து விடும். ஆகவே பெயர்ச்சொற்களை மொழிபெயர்க்கக் கூடாது. தொடர்ந்து ஒருவிடயத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அது கடந்த வருடம் (2015) டிசம்பர் மாதத்தில் பேஸ்புக்கில் கவிஞர் மகுடேசுவரன் அவர்களுக்கும் எனக்குமிடையில் பெயர்ச்சொற்களை தமிழாக்கம் செய்வது சரியா தவறா என்பது குறித்து நடந்த உரையாடலை இங்கே தருகின்றேன்.  # கவிஞர் மகுடேசுவரன் : செய்கோள் தொலைக்காட்சிச் சேவைக்கு டாடா நிறுவ