Posts

Showing posts from September, 2014

டுவிட்டர் @newsigaram - 05

Image
# நம் காதல் முதல்காதலாக இருப்பதை விட, அதுவே கடைசிக்காதலாகவும், கடைசிவரை வரும் காதலாகவும் இருப்பது தான் ரொம்ப முக்கியம். # அன்பு வைப்பது தவறில்லை , ஆனால், அந்த அன்பிற்கு காதல் எனும் பெயர் வைப்பதுதான் தவறு என்கின்றனர் பலரும் # பார்வையற்றோர் பாட்டு பாடி உதவி கேட்டார்கள்! அப்பொழுதுதான் தெரிந்தது பார்வையற்றவர்களை விட காதுகேளாதோர் அதிகம் என்று # திறமைசாலி எனப் பெயர் வாங்கிய பின் திமிர்பிடித்தவர் எனப் பெயர் வாங்குவது அப்படியொன்றும் கஷ்டமில்லை # ஒரு விழிப்புணர்வு முயற்சி... # யாரேனும் ஒருவருக்காக எல்லாரையும் வரவேற்று கொண்டிருக்கிறது "மின்மயானம்"!! # பயம் என்பது சிறிது நேரத்தில் நடக்கவிருக்கும் ஏதாவது ஒரு விஷயத்திற்கான ஒரு உடனடி சலனம் -படித்தது # சரியானவர்களை தவறான நேரத்திலும், தவறானவர்களை சரியான நேரத்திலும் அறிமுகப்படுத்தி காலம் தன் குரூர முகத்தைக் காட்டுகிறது # கெட்டவனுக்கு மட்டுமாவது கெட்டவனா இருந்தால் தான் நல்லவனுக்கு மட்டுமாவது நல்லவனா இருக்க முடியும்! # கடன் என்பது தூரத்திலிருக்கும் துன்பம் #படித்தது

வந்தாச்சு புது ஐ-போன் [ IPhone 6 / 6+ ]

Image
வணக்கம் வாசகர்களே! நாம் இதுவரை பேசாத பகுதி கைப்பேசிகள் பற்றியும் அதன் தொழினுட்பங்கள் பற்றியதுமாகும். நமது கைகளில் அதிகமாக சாம்சுங் , நோக்கியா , htc , மைக்ரோமாக்ஸ் போன்ற கைப்பேசிகள் தான் இருக்கும். இவற்றுக்கு சமனான எண்ணிக்கையில் சாதாரண மக்களிடையே சீனத் தயாரிப்புகள் [ அல்லது தரம் / விலை குறைந்த வர்த்தக நாமம் அற்ற ] காணப்படுகின்றன. பென்ஸ் காரைப் போலவே பணக்காரர்களுக்கேயுரிய அம்சங்களுடன் வலம் வருவது தான் இந்த ஆப்பிள் இன் ஐ-போன். ஆப்பிள் ஐ-போன் வரிசையில் இந்த வாரம் வெளியாகி எல்லோரையும் முணுமுணுக்க வைத்திருப்பது தான் இந்த ஐ-போன் 6 மற்றும் 6 பிளஸ். அப்படி இருக்குமா , இப்படி இருக்குமா என்ற விவாதங்களுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது ஐ-போன் இன் புதிய பதிப்பு.   அழகிய வடிவமைப்பு, புதிய IOS 8 இயங்குதளம் , விரல் அடையாளப் பாதுகாப்பு என்று பல்வேறு அம்சங்களைத் தாங்கி வந்திருக்கிறது ஆப்பிளின் இந்தப் புதிய குழந்தை. என்னைப் போலவே உங்களில் பலருக்கும் இதெல்லாம் பார்த்துப் பெருமூச்சு விடுவதற்கான ஒரு அம்சமாகவே இருக்கும். விதிவிலக்கானவர்களும் இருக்கலாம்.     இப்போது கைப்பேசி த