#100 மகிழ்ச்சியான நாட்கள் #100HappyDays

                        உங்களால் 100 நாட்கள் தொடர்ச்சியாக மகிழ்ச்சியுடன் இருக்க முடியுமா? முடியாது என்பதே உங்கள் பதிலாக இருக்கலாம். காரணம் நாம் வாழும் இயந்திர மயமான வாழ்க்கை. ஆனாலும் முடியும் என்கிறார்கள். இதனை ஒரு சவாலாகவே நம் முன் வைக்கிறார்கள். தொடர்ச்சியாக உங்களால் 100 நாட்கள் மகிழ்ச்சியாக இருக்க முடியுமெனின், இந்த சவாலுக்கு நீங்கள் தயாரெனின் உடனே 100happydays இணையத் தளத்துக்கு சென்று சவாலை ஏற்றுக் கொள்ளுங்கள்.

                சரி. சவால் என்பதையெல்லாம் தாண்டி 100 மகிழ்ச்சியான நாட்கள் பற்றி நம் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்வோம்.

 

                          கல்வி, வேலை, குடும்பம், சமூகம் என ஒவ்வொருவரைச் சுற்றியும் ஆயிரத்தெட்டு பொறுப்புக்கள். காலை கண்விழித்தது முதல் இரவு கண்ணுறங்கப் போகும் வேளை வரை தினமும் வித்தியாசமான மனிதர்களை சந்திக்க நேரிடுகிறது. வேலைச் சுமை, சம்பளம் போதவில்லை, படிக்க நேரமில்லை, நல்ல வீடு இல்லை, உறவினர் தொல்லை , புரியாத மொழியினருடன் வேலை, தொழில் மாற்றம், பிறப்பு, இறப்பு என நம்மைச் சுற்றிச் சுழலும் பிரச்சினைகளின் பட்டியலுக்கு முடிவே இல்லை. இத்தனைக்கும் மத்தியில் 100 மகிழ்ச்சியான நாட்கள் - சாத்தியம் தானா?


                  இன்றைய சூழலில் பணத்தை நோக்கிய தேடல் அதிகமாகியிருக்கிறது. மடிக்கணினி, தொடுதிரை கைப்பேசி, தனி வீடு, திருமணம், முதலீடு, கல்வி மற்றும் இதர தேவைகள் என பணத்தின் தேவை ஒவ்வொருவருக்கும் அதிகமாகவே இருக்கிறது. காலை எட்டு மணிக்கு வேலைக்கு சென்று மாலை ஐந்து மணிக்கு வீட்டுக்கு வந்துவிடும் தொழில் எல்லோருக்கும் அமைவதில்லை. அப்படியே அமைந்தாலும் சிலருக்கு அதில் வரும் வருமானம் போதுமானதாக இருப்பதில்லை. ஆகவே இரவு வரை மேலதிக நேரக் கடமை, இரவு வேலை முறைமை [Night Shift], பகுதி நேர வேலை என பணத்தை நோக்கிய தேடலில் தம்மை ஈடுபடுத்திக் கொள்கின்றனர். அவர்களுக்கான பணத்தின் தேவை முடிந்தாலும் அவர்கள் அதிலிருந்து விடுபடுவதில்லை.

 

            நகைச்சுவையாக சொல்வது போல, 'அம்பது வயசு வரைக்கும் கஷ்டப்படுவீங்க - அப்புறம் - அதுவே பழகிடும்' மாதிரியே இந்த பணத்தின் தேடலுக்கு பழக்கப்பட்டுவிடுகிறார்கள். அப்புறம்? அவர்களுக்கான பணத்தின் தேவை விரிவடைந்து கொண்டே போகும், அவர்களும் ஒரு நாளும் அதிலிருந்து மீளப்போவதில்லை.


       நம்மில் பலருக்கு பிரச்சினைகளை பிரச்சினையில்லாமல் கையாண்டு பழக்கம் இல்லை. கடுகளவு சிக்கலைக் கண்டாலும் மலையே இடிந்துவிட்டது போல் கலங்கிப் போய்விடுவார்கள். தனக்கு வந்தால் தெரியும் தலையிடியும் காய்ச்சலும் என்பீர்கள். உண்மைதான். ஆனாலும் பிரச்சினைகளை திறமையாகக் கையாளத் தெரிந்தவரா நீங்கள்? அப்படியானால் இந்த #100 மகிழ்ச்சியான நாட்கள் சவாலில் பங்கேற்க நீங்கள் தகுதியானவர் தான்.

 

அவ்வாறு இல்லையா? கவலை வேண்டாம். தகுதியை வளர்த்துக் கொண்டு சவாலில் களம் இறங்குங்கள். இந்த சவாலில் வெற்றி பெற்றுவிட்டால் இந்த உலகில் உங்களால் எதையும் இலகுவாகச் சாதிக்க முடியும்.


முதலில் நமது தேவைகளை இனம் காண வேண்டும். நமக்கான இலக்குகளை திட்டமிட வேண்டும். அடுத்து நமது சிக்கல்களை இனம் காண வேண்டும். அதற்கான தீர்வுகளை அடையாளப்படுத்த வேண்டும். நாளாந்த, வாராந்த, மாதாந்த, வருடாந்த நடவடிக்கைகளை சரிவரத் திட்டமிட வேண்டும். நம்பிக்கையானவர்களிடம் ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும். நமது சுக துக்கங்களைப் பரிமாறிக்கொள்ள காதலி / மனைவி, நண்பன், புத்தகம், எழுத்து என ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும். இடையறாத முயற்சியும் பயிற்சியும் அவசியம் தேவை. மிக முக்கியமாக உங்களுக்கான ஓய்வு / பொழுதுபோக்கு நேரத்தை தவறாமல் ஒதுக்கிக் கொள்ளுங்கள். இனி பாருங்கள். 100 நாட்கள் மட்டுமல்ல, வாழ்க்கையே மகிழ்ச்சியாக அமையும்.

இப்படிக்கு,
அன்புடன் 

சிகரம்பாரதி.

Comments

  1. மகிழ்ச்சியாக இருக்க அருமையான
    எளிமையான வழியினை
    பதிவாகத் தந்தமைக்கும்
    தொடரவும்(பதிவும் மகிழ்வும் )
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. முதல் வருகைக்கும் இனிமையான கருத்துக்கும் மிக்க நன்றி ரமணி.

      Delete
  2. அட இப்படி ஒன்று இருப்பதே மகிழ்ச்சி தான்...

    இணைப்பிற்கு நன்றி...

    ReplyDelete
    Replies
    1. இனிய கருத்துக்கு மிக்க நன்றி தனபாலன். முயற்சித்து பாருங்கள். நீங்கள் இக்கலைகளில் எல்லாம் கை தேர்ந்தவர் ஆயிற்றே?

      Delete
  3. Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

      Delete
  4. முயற்சி செய்து பார்க்கிறேன். நம்மை மேம்படுத்திக் கொள்ள உதவும்

    ReplyDelete
    Replies
    1. ம்ம்.. முயற்சிதானே வெற்றியின் ஆரம்பம்? வாழ்த்துக்கள். வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

      Delete
  5. முயற்சி செய்து பார்க்கிறேன்.

    தகவலுக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கும் வாழ்த்துக்கள். வெற்றிக் கனியை சீக்கிரமே சுவைக்க வாழ்த்துக்கள். வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

      Delete
  6. இவ்வாறான ஒரு யோசனையை எங்களோடு பகிர்ந்தமைக்கு நன்றி. ஏதேனும் பொருந்திவருகிறதா என முயற்சிப்பேன்.
    www.drbjambulingam.blogspot.in
    www.ponnibuddha.blogspot.in

    ReplyDelete
  7. அருமையான தகவலை பகிர்ந்தமைக்கு நன்றி!

    ReplyDelete
  8. அருமையான தகவல்கள் பாராட்டுக்குரியது வாழ்த்துகள்

    ReplyDelete

Post a Comment

உங்கள் கருத்துகள் தான் எங்களுக்கான கைதட்டல்கள். பதிவைப் பற்றிய எண்ணங்களை தயங்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் விமர்சனங்களை வரவேற்கிறோம்.

சிகரம்

Popular posts from this blog

உங்கள் மனம் கவர்ந்த பிக்பாஸ் போட்டியாளர் யார்? Who is your favourite Bigg Boss Contestant?

பத்தி எழுத்து என்றால் என்ன? | கட்டுரை | வல்லினம் | ஸ்ரீதர் ரங்கராஜ்

சிக்கலில் சிக்கிய பிக் பாஸ்? இரண்டாம் வாரத்துடன் இடைநிறுத்தம்?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2019-21 | இருபது-20 கிரிக்கெட் | சிகரம் ஆடுகளம்

பிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - ஜூன் மாதம் ஆரம்பம்!

ஐ.பி.எல் ஆட்ட விவரங்கள் | புள்ளிப் பட்டியல் IPL 2018 SCHEDULE & RESULTS #IPL2018 - WEEK 01

Bigg Boss Tamil Vote (Online Voting) Season 02 | Public Opinion Poll | Week 13 Voting | Google Vote

பிக் பாஸ் தமிழ் - 02 எப்படி அமையும்?

ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா - 2018 ஏப்.07 இல் ஆரம்பம்! #IPL2018

பிக்பாஸ் உத்தியோக பூர்வ அறிவிப்பு மே 26 ஆம் திகதி!